Rathykaran vlogs

Rathykaran vlogs Education, sports and politics

10/08/2026
07/08/2026
07/08/2026

2025 ஆம் ஆண்டின் சிறந்த இலங்கை கிரிக்கெட் வீரராக தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) நடைபெற்ற 'இலங்கை கிரிக்கெட் விருதுகள்' வழங்கும் விழாவிலேயே இந்த விருது வழங்கப்பட்டது.

அத்துடன், இதில் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து (Chamari Athapaththu) விருதைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு முழுவதும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளிப்படுத்திய திறமைகளைப் பாராட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய பல வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரருக்கான விருதை தனஞ்சய டி சில்வா (Dhananjaya De Silva ) பெற்றுக்கொண்ட அதேவேளை சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதை பிரபாத் ஜெயசூரிய (Prabath Jayasuriya) பெற்றுக்கொண்டார்.

சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக வனிது ஹசரங்க (Wanindhu Hasaranga) விருதினை பெற்றுக்கொண்டதோடு , சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருதை சரித் அசலங்க (Charith Asalanka) பெற்றுக்கொண்டார்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளராக அசித பெர்னாண்டோ (Asitha Fernando) கௌரவிக்கப்பட்டதோடு, 2025 ஆம் ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சாளராக துஷ்மந்த சமீர (Dushmantha Chameera) விருதைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீராங்கனையாக சமரி அதபத்து (Chamari Athapaththu) விருதுகளைப் பெற்ற நிலையில், சிறந்த துடுப்பாட்டக்காரராக ஹர்ஷிதா சமரவிக்ரம (Harsh*tha Samarawickrama) விருது பெற்றார்.

சரி 😊 உங்க போன் storage full ஆயிடுச்சுனா இப்படி செய்யலாம்:*1. உடனே இடம் காலி பண்ண*- *தேவையில்லாத போட்டோ/வீடியோ*: Blur ஆன...
28/07/2026

சரி 😊 உங்க போன் storage full ஆயிடுச்சுனா இப்படி செய்யலாம்:

*1. உடனே இடம் காலி பண்ண*
- *தேவையில்லாத போட்டோ/வீடியோ*: Blur ஆன போட்டோ, Screenshot, அனுப்புன WhatsApp forward எல்லாம் delete பண்ணுங்க
- *App cache clear*: Settings > Storage > Cached data. Instagram, Facebook, TikTok ரொம்ப இடம் எடுக்கும்
- *பெரிய Files*: Settings > Storage-ல போய் "Large files" பாருங்க. Video தான் அதிகமா இடம் சாப்பிடும்

*2. வேற இடத்துக்கு மாத்துங்க*
- *Cloud-ல Backup*: Google Photos / iCloud-ல photo, video backup பண்ணிட்டு "Free up space" அழுத்துங்க
- *SD Card / Laptop-க்கு மாத்துறது*: பழைய வீடியோ, songs இருந்தா computer-ல save பண்ணிக்கோங்க
- *WhatsApp*: Settings > Storage and Data > Manage Storage. Group-ல வந்த பெரிய video-வ delete பண்ணுங்க

*3. மறுபடி Full ஆகாம பார்க்க*
- *Auto download off*: WhatsApp > Settings-ல photo/video auto download-ஐ WiFi-ல மட்டும் வைங்க
- *App-அ delete பண்ணுங்க*: பயன்படுத்தாத game, shopping app எல்லாம் uninstall பண்ணுங்க
- *Streaming பயன்படுத்துங்க*: Song, movie download பண்ணாம online-லயே பாருங்க

Address

Trincomalee

Telephone

+94712003031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rathykaran vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rathykaran vlogs:

Shortcuts

Share