YESDO

YESDO .

மருத்துவ சேவையின் சிறப்புக் கௌரவிப்புகாத்தான்குடி மண்ணில் கடந்த 34 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடனும், மனித...
11/08/2026

மருத்துவ சேவையின் சிறப்புக் கௌரவிப்பு

காத்தான்குடி மண்ணில் கடந்த 34 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடனும், மனிதநேயத்துடனும், அயராது சேவையாற்றி வரும் மதிப்பிற்குரிய Dr. அலிமா ரஹுமான் அவர்களை கௌரவிக்கும் சிறப்புநிகழ்வு, காத்தான்குடி தள வைத்தியசாலை குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், YESDO சார்பாக Dr. அலிமா ரஹுமான் அவர்களின் நீண்டகால மருத்துவ சேவையையும், அர்ப்பணிப்பையும், மனிதநேயப் பணிகளையும் பாராட்டி Appreciation Shield ஒன்று எமது அமைப்பினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மக்களின் நலனுக்காக 34 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றிய உன்னத சேவை என்றும் போற்றுதலுக்குரியது.

Dr. அலிமா ரஹுமான் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அஸ்ஸலாமு அலைக்கும்.உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு இன்று (20-06-2026) மட்டக்களப்பு இரத்த வங்கியினால் மட்டக்கள...
20/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு இன்று (20-06-2026) மட்டக்களப்பு இரத்த வங்கியினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்த சேகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் YESDO அமைப்பினரை கெளரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

“எமது பெற்றோர்கள் எமது கௌரவம்” நிகழ்வு(29.05.2026)எமது YESDO அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக காத்தான்குடி மண்ணில் கல்வி...
29/05/2026

“எமது பெற்றோர்கள் எமது கௌரவம்” நிகழ்வு
(29.05.2026)

எமது YESDO அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக காத்தான்குடி மண்ணில் கல்வி, மருத்துவம், அனர்த்த முகாமைத்துவம் , விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சமூகச் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இந்த பத்து ஆண்டுகளாக சமூகத்திற்காக நாம் மேற்கொண்ட சேவைகளை, எம்மை பெற்றெடுத்து உருவாக்கிய எமது அன்புப் பெற்றோர்களுடன் இணைந்து நினைவுகூரும் வகையில், அவர்களை கௌரவிக்கும் “எமது பெற்றோர்கள் எமது கௌரவம்” எனும் நிகழ்வு இன்று (29.05.2026) காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமைப்பின் 50 உறுப்பினர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மேலும், பெற்றோர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அதிதிகளின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“எம்மை உருவாக்கிய உன்னத உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் கௌரவங்களும்.”

மாணவர்களுக்கான தலைமைத்தும பயிற்சி நெறி(17.05.2026)காத்தான்குடி மத்திய கல்லூரியில் எமது YESDO அமைப்பினால் கல்வி மற்றும் இ...
17/05/2026

மாணவர்களுக்கான தலைமைத்தும பயிற்சி நெறி
(17.05.2026)

காத்தான்குடி மத்திய கல்லூரியில் எமது YESDO அமைப்பினால் கல்வி மற்றும் இணைப்பாட விதான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.
அதனடிப்படையில் வகுப்பு தலைவர்களுக்கான(Class monitor) தலைமைத்தும பயிற்சி 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மன்முனை தெற்கு உதவி பிரதேச செயலாளர் Mr. S. பார்த்தீபன் SLAS அவர்களும் உளவள ஆலோசகர் Mr. NMM நிஜாஹ் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்ட இச்செயலமர்வில் தரம் ஆறு தொடக்கம் பத்து வரையான தெரிவுசெய்யப்பட்ட 53 வகுப்பு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்காக உதவி செய்த பாடசாலை அதிபர் AL. சப்ரி sir (SLPS,) உப அதிபர் MNM. பெளசான் sir மற்றும் MA.நெளஷாத் sir, பகுதி பொறுப்பாசிரியர் CMM. பாசில் sir மற்றும் நிகழ்வினை சிறப்பாக நடாத்த உதவிய அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஜஸாகல்லாஹு ஹைறா.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ(03.05.2026)மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயத்தின் பாடசாலை வளாகத்தில் களைகள்...
06/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
(03.05.2026)
மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயத்தின் பாடசாலை வளாகத்தில் களைகள் மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து, மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், விஷ ஜந்துகளின் அச்சுறுத்தலும் காணப்படுகின்றதாகவும் இதற்கான உதவிகளை வழங்குமாறு அப்பாடசாலையின் அதிபரால் எமது YESDO அமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு, 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று எமது YESDO அமைப்பினால் பாடசாலை வளாகத் துப்பரவு பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. மேலும், புற்கள் மற்றும் களைகள் நீண்ட காலத்திற்கு மீண்டும் வளராத வகையில் களைக்கொல்லி தெளிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் பாடசாலை வளாகத்தை மாணவர்களுக்கு நிரந்தரமாக பயனுள்ளதாக மாற்றியமைக்கும் திட்டங்கள் தொடர்பாக அதிபருடன் எமது நிர்வாக உறுப்பினர்களால் உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நற்செயலில் கலந்து கொண்டு ஒத்துழைத்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
ஜஸாகுமுல்லாஹு கைரன் 🤍

காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு(13.04.2026)அஸ்ஸலாமு அலைக்கும்,எமது YESDO அமைப்பு, காத்தான...
15/04/2026

காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு
(13.04.2026)

அஸ்ஸலாமு அலைக்கும்,
எமது YESDO அமைப்பு, காத்தான்குடி மத்திய கல்லூரியின் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து, கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, பாடசாலையின் புதிய அதிபர் AL. சப்ரி அவர்களுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் 13.04.2026 அன்று பாடசாலை அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, YESDO அமைப்பினால் கடந்த காலங்களில் பாடசாலைக்காக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்து நினைவுகூறப்ப்பட்டது. மேலும், பாடசாலை தற்போது எதிர்நோக்கும் சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்த YESDO அமைப்பு வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பாக ஆக்கபூர்வமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி இல்லத்திற்கான குளிர்சாதனப் பெட்டி அன்பளிப்பு நிகழ்வு(11.04.2026)காத்த...
13/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி இல்லத்திற்கான குளிர்சாதனப் பெட்டி அன்பளிப்பு நிகழ்வு
(11.04.2026)

காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு அன்பளிப்பாக கிடைக்கும் உணவுகளை பாதுகாப்பாகவும் சுகாதாரமான முறையிலும் சேமித்து வைக்க, ஒரு குளிர்சாதனப் பெட்டி (Freezer) நீண்டகால தேவையாக இருந்து வந்தது.

எமது YESDO அமைப்புடனான நீண்டகால நல்லுறவின் அடிப்படையில், குறித்த தேவைக்கான உதவியை அந்த இல்லத்தின் நிர்வாகம் எம்மிடம் கோரியிருந்தது.
அதனை முன்னிட்டு, புனித ரமழான் மாதத்தில் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம், குறித்த குளிர்சாதனப் பெட்டியை எமது YESDO அமைப்பினால், அந்த இல்லத்தின் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 11.04.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், எமது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இல்லத்தின் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நற்செயலுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கிய எமது அமைப்பின் உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹு ஹைறா

ரமழான் மாத உலர் உணவு விநியோகம் – 2026அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..எமது YESDO அமைப்பினால் வருடாந்தம்  ரமழான் மாதத்தில் பொருளா...
14/03/2026

ரமழான் மாத உலர் உணவு விநியோகம் – 2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எமது YESDO அமைப்பினால் வருடாந்தம் ரமழான் மாதத்தில் பொருளாதார ரீதியாக தேவையுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே!
அந்த வகையில் இந்தவருடமும் எமது அமைப்பினால் பொருளாதார ரீதியாக தேவையுள்ள நண்பர்கள், எமது அமைப்பின் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கொண்ட மொத்தம் 50 குடும்பங்களுக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இதற்காக பொருளாதார ரீதியாக உதவி செய்த எமது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய பொருளாதாரங்களில் அல்லாஹ் மேலும் பரகத் செய்வானாக 🤲
ஜஸாக்கல்லாஹு கைறா

YESDO அங்கத்தவர்களுக்கான குடும்ப இப்தார் நிகழ்வு – 2026YESDO அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்படும் அங்கத்தவர்களுக்கான இப்...
02/03/2026

YESDO அங்கத்தவர்களுக்கான குடும்ப இப்தார் நிகழ்வு – 2026

YESDO அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்படும் அங்கத்தவர்களுக்கான இப்தார் நிகழ்வு இம்முறை குடும்ப இப்தார் நிகழ்வாக 01.03.2026 அன்று (நேற்று) காத்தான்குடி White House மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், நுஸ்ரி நளீமியின் விசேட மார்க்க சொற்பொழிவைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும், நண்பர்களுக்கான சுவாரஸ்யமான போட்டிகளும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இரவு 8.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், எமது அமைப்பின் 34 நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்

🇱🇰 சுதந்திர தினத்தை முன்னிட்டு குளிர்பான விநியோகம் 🇱🇰Youth Empowering & Social Development Organisation (YESDO) சார்பில்...
04/02/2026

🇱🇰 சுதந்திர தினத்தை முன்னிட்டு குளிர்பான விநியோகம் 🇱🇰

Youth Empowering & Social Development Organisation (YESDO) சார்பில்,
இன்று(04-02-2026) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
YESDO அலுவலகத்தில் (காத்தான்குடி தள வைத்தியசாலை முன்பாக) பொது மக்களிற்கு
குளிர்பான விநியோக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம்
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய
அனைத்து YESDO உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும்
எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

✨ ஒற்றுமை, அமைதி மற்றும் நாட்டுப்பற்றுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். ✨

YESDO – *இளைஞர் வலிமை, சமூக முன்னேற்றம்*

Address

No-395, Beach Road, New Kattankudy/03
Kattankudi

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 17:00 - 20:00

Telephone

+94772828280

Website

Alerts

Be the first to know and let us send you an email when YESDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YESDO:

Shortcuts

Share