Siva Express

Siva Express Temple breaking news..

புத்தாண்டு மலர்கிறது 💕1. எப்போது ?எதிர்வரும் 13.04.2024 சனிக்கிழமை இரவு வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 8.15க்கு திருக்கணித ப...
09/04/2024

புத்தாண்டு மலர்கிறது 💕

1. எப்போது ?

எதிர்வரும் 13.04.2024 சனிக்கிழமை இரவு வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 8.15க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி இரவு 9.04 மணிக்கு

2. புத்தாண்டுப் பண்டிகை எப்போது ?

இரவில் வருடம் பிறப்பதால் மறுநாள் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமையே எங்களுக்கு சித்திரை முதல் நாள். அன்று தான் பண்டிகை .. பொங்கி வழிபடவும் உரிய நாள் இதுவே..

3. மருத்து நீர் வைத்து நீராடும் புண்ணிய காலம் எது ?

13.04.2024 மாலை 5மணிக்கு விஷு புண்ணிய காலம் தொடங்குகிறது. எனவே அப்போது மருத்து நீர் வைத்து நீராடி வருஷம் பிறக்கும் போது வழிபாடு செய்யலாம்.

4. இந்த ஆண்டுக்கு ஆடைக்கு என்ன நிறம் சொல்லப்பட்டிருக்கிறது ?

வெண்பட்டு அல்லது நீல நிறப்பட்டாடை

5. இந்த வருஷ பெயர் என்ன ?

குரோதி. இது 60 வருட சுற்றோட்டத்தில் 38ஆவது வருடம்.

6. இந்த ஆண்டு பெயர்ப் பலன் என்ன ?

இதற்கு அதிக முதன்மை தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அது 60 வருடப்பொது வெண்பாவே. நடைமுறையில் இதற்கு மாறி நடக்க கண்டுள்ளேன்.

இலங்கைத் தமிழனாக நல்ல பெயர் கொண்ட ஆண்டுகள் எங்களுக்கு ஏதும் தந்தனவா?

இம்முறை கூட வெண்பா பலனும் வருஷாரம்ப ஜாதக பலனும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. (வாக்கியம் 31ஆம் பக்கம் பார்க்க )

எனவே இந்த குரோதி ஆண்டு தீமைகளுக்கு குரோதியான வருடமாகட்டும்! நன்மைகளை விளைவிக்கட்டும் என்று நேரிய சிந்தனையுடன் இறைவனிடம் வேண்டுவோம்.

7. கை விசேஷ நேரம் என்ன ?
இம்முறை சிறப்பே முதல் நாளே (14.04.2024) நல்லநாள். அன்று காலை 7.57 முதல் பகல் 12 மணி வரை
பிறகு மாலை 6.20 முதல் 8.17 வரை

15.04.2024 திங்கள் காலை 6 மணி முதல் 7.25 வரை 10 மணி முதல் 12மணி வரை

8. விருந்தூண், விவசாய ஆரம்பம் இவற்றுக்கு..

பொதுவாக இதே நேரங்களைப் பயன்படுத்தலாம்.

9. தொழில் ஆரம்பிக்கவும், கல்வி, கலை முயற்சி ஆரம்பிக்கவும்..

பொதுவாக இதே நேரங்களைப் பயன்படுத்தலாம். 14.04.2024 திங்கட்கிழமை பகல் 12 மணிக்குள் நன்று. திருக்கணிதப்படி 12.12 க்குப் பிறகு அஷ்டமி வருவதால் அதற்கு முன் செய்வது நன்று.

10. இந்த புத்தாண்டு சிறப்பு என்ன ?

எமது வருஷம் சூரியனை பிரதானமாக கொண்டு கணிக்கப்படுவது. அதாவது சௌரமான வருஷாரம்பம்.

அதை விட இந்த உலகின் ஆதார சக்தியே சூரியனே. விஞ்ஞானம் என்ன சொன்னாலும் சூரியனின் ஆதாரத்திலேயே இப்பிரபஞ்சம் இருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் நாள் சூரியனுக்கு உகந்த பானு வாரம் (ஞாயிற்றுக்கிழமை). அன்று அந்த சூரிய தேவருக்கு சிறப்பான சப்தமியும் சேர்ந்து பானு சப்தமி என்ற புண்ணிய நாள் ஆகிறது.

10/05/2020

10th may 2020.

Nalluran my creativity
02/09/2015

Nalluran my creativity

Jaffna Nallur 2013... Edit-Siva Express

02/11/2013
08/09/2013

Temple breaking news..

06/09/2013

Siva Express

18/04/2013
12/04/2013

hai

13/11/2012

Address

Jaffna Town

Telephone

+94755560870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siva Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share