Solai

Solai To improve the economic level and maintain the sustainability in production of small holder farmers The federation is now focusing on fruit crops production.
(1)

Introduction

Batticaloa North Agriculture Producers’ Federation (BT/NAPF) was formed to increase the agriculture production, to improve the economic level and to maintain the sustainability in production of small holder farmers and war affected people. This federation ranges from Mayilampaveli to Vaharai and it includes 300 war affected younger members and 1200 affected farmers. It has a monitor

ing and evaluation team including 21 society Administrative members. Support agencies for this federation are Department of Agriculture, Divisional Secretariats, Agrarian Service Centre, ZOA, World vision,YFC and Eastern University of Sri Lanka and Sri Lankan Friendship Society. BT/NAPF has done some activities with the support of World vision. Those are provision of insect proof net for 10 farmers to produce pesticide free organic vegetables, provision of agro wells and initiation of palmyrah products’ production. BT/NAPF provides the awareness on environmental and natural safety among farmers. The Federation links the farmers with banks / financial sources to get credit facilities for the animal production and provides the sales center especially for the women to sell their products easily. The fruit cultivation can play an important role in improving farmers’ income and increasing employment avenues in the rural sector. Fruit crops were cultivated in around 5 ha at the same GN diviision. A significant potential also exist in the district to grow high value crops for local distributors, local markets, and well established / small scale hotels. This will also provide opportunities for export earning, employment avenues and learning of post-harvest technologies and marketing of diversified products.

#சோலையின் #உறுதி #மொழி
As the North Agricultural Producers' Batticaloa North Agriculture producer's federation , we pledge to promote the socio-economic, human rights and gender equality of the vulnerable people living in our area, to protect our traditional cultures against corruption and global warming, and to carry out public service to these people with dignity and openness in any situation. Batticaloa North Agriculture producer's federation. (Solai)


மட்/வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம்

බිබිලතුරු කෘෂිකර්මික නිෂ්පාදකයන්ගේ වත්කම

BT/North Agriculture Producer's Federation

http://solai.lk/wp/wp

10/04/2026
எமது கல்லூரி விவசாயப்பாடநெறி மாணவர்களின்(Plant & Nursery)  கற்றல்செயற்பாட்டின் ஒரு பகுதியாக அவர்களால் பலவேறு நாற்றுக்கள்...
24/03/2026

எமது கல்லூரி விவசாயப்பாடநெறி மாணவர்களின்(Plant & Nursery) கற்றல்செயற்பாட்டின் ஒரு பகுதியாக அவர்களால் பலவேறு நாற்றுக்கள் உருவாக்கபட்டு விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/p/18Vrh9KupP/

கறிமிளகாய் -15/=
வர்க்கம்- CA8
HYW

மிளகாய் -10/=
வர்க்கம்-KA2
MI2

தக்காளி -10/=
வர்க்கம்- கேசி1

கத்தரி -10/=
வர்க்கம்-SM164

பொதி செய்யப்படாத மிளகாய், தக்காளி,கத்தரி கன்றுகள் ஒன்று 5/= படி விற்பனை செய்யப்படும்.

பனங்கிழங்கு விற்பனைக்கு உண்டு. ச. சிவசக்தி மூங்கிலடி வீதி வந்தாறுமூலை.0761747011விலை 8.00பேசிதீர்மானிக்கப்படும்.
23/03/2026

பனங்கிழங்கு விற்பனைக்கு உண்டு.
ச. சிவசக்தி
மூங்கிலடி வீதி
வந்தாறுமூலை.
0761747011
விலை 8.00
பேசிதீர்மானிக்கப்படும்.

19/03/2026

விவசாய அறுவடைக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீற்றர் எரிபொருளையும் உழவு நடவடிக்கைகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 20 லீற்றர் எரிபொருளையும் QR இன்றி விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம் - விவசாய ஆணையாளர் நாயகம்

பசுந்தாள் உரத்தின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?பசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை (நைதரசன்)சதவீதம் வரை வ...
13/03/2026

பசுந்தாள் உரத்தின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

பசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை (நைதரசன்)சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கிறது. இதனால் நிலம் வளமடைகிறது.
பசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கிறது.
பசுந்தாள் உரப்பயிர் நிலத்தின் அமைப்பை சீராக்குகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன் வளமான மேல் மண்ணை பாதுகாக்கிறது.
மண்ணின் கரிமப்பொருளை அதிகப்படுத்துவதோடு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.
மண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.
பார் நிலத்தை சீர்செய்கிறது.
பசுந்தாள் உரப்பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.
மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம்.
பசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது.
பசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது.
அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது. பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.
நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது. அவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.
சணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும்,
தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும்,
மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும்
கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும்.
பசுந்தாள் உரம் இடும் முறைகள்:
பசுந்தாள்களை நடவுக்கு இரு வாரங்களுக்கு முன் இடவேண்டும்.
பசுந்தாள் பயிரை பூ பூக்க தொடங்கிய உடனேயே மடக்கி வயலை உழ வேண்டும்.
பசுந்தால்; உரப்பயிர் விதைத்த காட்டில் உயிர் உரங்ககளை எருவில் கலந்து விதைப்பதால் பயிருக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்க வழிவகை செயய்யும்.
இவ்வாறு செய்வதால் நமக்கு மகசூல் அதிகம் வர வாய்ப்பள்ளது. மண்வளமும் கெடாது
Facebook பதிவு

நெற் செய்கையில் லேசர் நிலச்சமப்படுத்தும் கருவி (Laser Land Leveller) விளிப்பூட்டும் ஒன்று கூடல்நெற் செய்கையில் லேசர் நில...
12/03/2026

நெற் செய்கையில் லேசர் நிலச்சமப்படுத்தும் கருவி (Laser Land Leveller) விளிப்பூட்டும் ஒன்று கூடல்

நெற் செய்கையில் லேசர் நிலச்சமப்படுத்தும் கருவி (Laser Land Leveller Machine) பயன்பாட்டை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் விளிப்பூட்டும் ஒன்று கூடல் நிகழ்வு 11.03.2026 அன்று ஆயித்திய மலை விவசாயப் போதனாசிரியர் பிரிவின், பனங்கண்டடிசேனை பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வு திரு. T. கோசலரூபன் – விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர்
திரு. மு. பரமேஸ்வரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும் Dr. Sampath Senevirathna,
Deputy Director of Agriculture, Farm Mechanization Training Centre, Puliyankulama, Anuradhapura அவர்கள் மற்றும் அவர்களது தொழில்நுட்பக் குழுவினரால் லேசர் நிலச்சமப்படுத்தும் கருவியின் செயல்முறை விளக்கம் மற்றும் செய்முறை காட்சிப்படுத்தல் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செய்து காட்டப்பட்டது.

இந்த செய்முறை காட்சிப்படுத்தல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன், நெற்செய்கையில் நிலத்தை துல்லியமாக சமப்படுத்துவதன் மூலம்

நீர் முகாமைத்துவம்

விளைச்சல் அதிகரிப்பு

உற்பத்தி செலவு குறைப்பு

போன்ற பல நன்மைகள் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு பெற்றனர்.

இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர்கள், விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தகவல்
விவசாய விரிவாக்க திணைக்களம் மட்டக்களப்பு

Address

Batticoloa
30,000

Opening Hours

Monday 10:00 - 15:00
Tuesday 10:00 - 15:00
Wednesday 10:00 - 15:30
Thursday 10:00 - 15:00
Friday 10:00 - 15:00
Saturday 10:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when Solai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solai:

Share