09/08/2024
நண்பர் அக்கு ஹீலர் திரு ஹரி பிரசாத் க்கு பிறந்த நாள் வாழ்த்து கட் செவி வழியே வழங்கியது
🏵️ ஆடையும், சிகையும், திருத்திய நின் மீசையும், மண் போற்றும் நிறமும், நிமிர் நடையும் நேர்த்தியான அழகு தமிழ் மகனாய் அடையாளம் காட்ட;
இறுதி வரை எடுத்த நிலைப்பாட்டில் உறுதி காட்டும் உன் குருதி இன மானத்தினை பறை சாற்றுகிறது.
சேலம் வரை லிப்ட் தந்ததால் பேகன்;
இடையில் சறுக்கி வண்டி சாய்ந்த சகோதரிகளின் மேல் காட்டிய பரிவில் கர்ணன்.
அக்கு சப்ஜெட் அலசி குழுவிற்கு சுவையாய் பரிமாறும் குகன்.
குறும்பு செய்யும் நேரங்களில் typical back bench.
திருமதி ஹரி சொல்கிறார் "அவருக்கா பாட தெரியாது! வந்து பாருங்கள் எங்கள் வீட்டில். அவர் என்னிடம் பேசுவதே மெல்லிசைதான்".
இன்று பொழியும் வாழ்த்து மழை உணர்த்துகிறது, உங்கள் அன்பின் ஈரத்தை, பண்பின் ஏற்றத்தை,
வாழ்த்துகள் பல; பண்புகள் மேல் ஓங்கி, இன்ப பண் இசைக்கட்டும் வாழ்வின் வழி நெடுக.🌸