Sivashyam associates

Sivashyam associates Sivakumar.V.K
(Home Loans)
Coimbatore,Pollachi,Tripur, Udamalpet
Mobile --09944066681 Call or sms
s

கேள்வி : வீட்டுக்கடன் திட்டத்தில் உங்களின் பணத்தை எப்படி சேமிக்கலாம் ?என் பதில் :📚📚✍️✍️✍️👍👍🏡🏡🏡🏡வீட்டுக் கடன் திட்டத்தில்...
29/09/2023

கேள்வி : வீட்டுக்கடன் திட்டத்தில் உங்களின் பணத்தை எப்படி சேமிக்கலாம் ?

என் பதில் :📚📚✍️✍️✍️👍👍🏡🏡🏡🏡

வீட்டுக் கடன் திட்டத்தில் உங்கள் பணத்தை இப்படியும் சேமிக்கலாம்..!

ஒவ்வொருவருடைய வாழ்விலும் வீடு என்பது ஒரு அடிப்படை வசதி என்பதுடன் ஒரு வீட்டைச் சொந்தமாக்குவது பொதுவாக அனைவரின் கனவுகளிலும் ஒன்று. நம்முடைய நிதிநிலைகள் பலமாக இல்லாத நேரங்களில் வீட்டுக் கடன்கள் நம் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவுகின்றன.

இன்றைய நிலையில் வீட்டுக்கடன் வாங்குவது எளிதாகிவிட்டாலும், இதனைத் திருப்பிச் செலுத்துவதில் நம்முடைய கஷ்டம் நமக்குத் தான் தெரியும்.வீட்டுக் கடனும்.. வங்கிகளும்.. இந்நாளில் பெரும்பாலான வங்கிகள் பல்வேறு விதமான வீட்டுக் கடன் திட்டங்களில் மக்களைக் கவரும் விதமாக அவர்களின் வீட்டுக் கனவை பூர்த்திச் செய்ய வழங்குகின்றன. அவை ஒருபுறம் கனவாக இருந்தாலும் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டுக்கடன்கள் ஒரு மிகப்பெரிய சுமையை நம் மீது சுமத்துகின்றன.

நிலையான வட்டி வகிதம்..

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவை வங்கிகளுக்கு மாறும் தன்மையுடைய வட்டி வீதத்தை (Floating Intrest rates) விளக்கிக் கொள்ளுமாறும் உண்மையான வட்டியை மட்டுமே வசூல் செய்ய அறிவித்துள்ளது.உறுதி செய்துகொள்ளவும்... வட்டி விகித முறையை மாற்றியதன் மூலம் அபராதத் தொகையை நீக்கியது மட்டும் அல்லாமல் கடன் பெற்றவர்கள் பணத்தைச் சேமிக்கவும் வழி செய்துள்ளது. மேலும் கடன் வாங்கும் போதே வட்டி விகித முறையை உறுதி செய்துகொள்வது உத்தமம்.
சம்பள கணக்கு...

உங்கள் கடன் தவணையை உங்கள் சம்பள வங்கிக் கணக்கில் இணைப்பதன் மூலம் அதைச் செலுத்துவதைக் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் குறிப்பிட்ட தேதியில் தேவையான அளவு பணத்தை உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

ப்ரிபே முறை...

தற்போது வங்கிகளில் வீட்டுக்கடன்களில் ப்ரிபே (Prepaying) எனப்படும் முன்கூடியே செலுத்தும் வசதியையும் அளிக்கின்றன. இதன் படி ஒருவர் தான் பெற்ற கடனை முன்கூடியே கூடச் செலுத்தலாம். இதன் மூலம் கடனை செலுத்தும் தவணைக்காலம் மற்றும் வட்டியும் குறையும்.வரவுத் தொகை இந்த முன்கூடியே செலுத்தும் வசதி மூலம் வரவுத் தொகை ஏதாவது மீதம் இருந்தால் அதனைத் திரும்பப் பெறவும் (Withdrawal) செய்யலாம்.

ஆனால் குறைந்த வட்டி போன்ற வசதிகளை இது குறைக்கும். இந்த வசதி அடிப்படைப் வட்டி விகிதத்தில் 25-50 புள்ளிகள் அதிகம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும். இந்த அடிப்படை சாதாரண வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விடச் சற்று அதிகம்.

🏡🏡

சிவக்குமார்..V.K. வீட்டு கடன் பிரிவு . அழைப்பு எண் ☎️☎️:9944066681👍Email:[email protected]📚📚✍️✍️

வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் ...
20/12/2022

வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?
வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன.
மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும்.
உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும்.
உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது.
வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும்.
முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
Sivakumar.V.K
(Home Loans )
Call:9944066681.(Whatsapp)

13/10/2022
கேள்வி : சென்னை ,கோவை ..பெங்களூர் ,ஹைதராபாத் ,மும்பை ,புனே ,முழுவதும் மென்பொருள் நிறுவனங்கள் பல உள்ளது. அவற்றில் பணியாற்...
21/09/2022

கேள்வி :

சென்னை ,கோவை ..பெங்களூர் ,ஹைதராபாத் ,மும்பை ,புனே ,முழுவதும் மென்பொருள் நிறுவனங்கள் பல உள்ளது. அவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் ஆயிரம் மற்றும் லட்சங்களை மாத ஊதியமாக பெறுகிறார்கள், அவர்களுடைய பணி எப்படி இருக்கும்?



என் பதில் :🥰🤝📚✍️🏘️

என் குடும்பத்தில், அடுத்த தலைமுறையினர் எட்டு பேர் இந்தத் துறையில், சென்னையில் பணி புரிகிறார்கள். அதனால், என்னால் ஓரளவு அவர்கள் பணி நிலைமை பற்றிக் கூற இயலும்.



கை நிறைய ஊதியம் பெறுகிறார்கள். உண்மை. அவர்களின் வயது 26ல் லிருந்து 35 வரை. ஊதியம் 60,000 ல் இருந்து 1,50,000 வரை. மூவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஐவருக்கு மணம் ஆகவில்லை. அதில் ஒருவருக்கு வயது 34. மீதி நால்வருக்கு இன்னமும் வயது உள்ளதென ஆறுதல் கொள்ளலாம் (நமது சமூக மதிப்பீட்டின்படி).

எல்லோரும் புரிந்து கொண்டு உள்ளார்கள் - தங்கள் வாழ்க்கை இப்படித்தான் போகும் என்று. அதாவது, நாள் ஒன்றுக்கு குறைந்தது 16 மணி நேர வேலை. சரியான தூக்கம் கிடையாது;சரியான வேளைக்கு, நல்ல சத்தான உணவு கிடையாது. உறவினரைப் பார்ப்பது, நல்ல நாள், குடும்ப நிகழ்வுகளில் பங்கெடுப்பது என்பது அந்த நேர வாய்ப்பைப் பொறுத்ததுதான். நம் கையில் அவ்வளவாக இல்லை. எந்த நேரமும் 'மன அழுத்தம்' உண்டுதான்.

இவை எல்லாவற்றையும் மீறி, ஓரளவு சேமிப்பு, எதிர்கால பொருளாதார நிலைமைக்கு ஓரளவு உறுதியளிக்கும் இப்போதைய பணி நிலை.

தனி மனித ஒழுக்கம் இருந்தால் நன்று- புகை, குடி, , ஆகியவைகளைத் தவிர்த்தல் மிக மிக முக்கியம். மன அழுத்தத்தைக் கையாள, சினிமா, பாடல்கள், விருந்து, (அப்போது மட்டும் 'கொஞ்சூண்டு மது!'), நண்பர்களுடன் சுற்றுலா - நிறுவனமே ஏற்பாடு செய்வது - என வாழ்க்கைக்குப் பழகிக் கொள்கிறார்கள்.

வெளி நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன - சிலர் துணிந்து மேற்கொள்கிறார்கள். சிலர் பெற்றோர் நிலைமை பொறுத்துத் தயங்குகிறார்கள்.

அவர்கள் மூலம் அறிவது - பலர் இந்தப் புதிய பணிச்சுமை சூழலைத் தாங்க முடியாமல், , பொருளாதாரத் தொல்லைகள் (ஸரியாக திட்டமிடுதலின்மை), அதனால் தற்கொலை - எனப் பல கதைகள்.

வளர்ப்பு மிக மிக முக்கியம். அவ்வப்போது மன உறுதி குலையாமல் இருக்க, ஆலோசனைகள், உதவிகள் அவசியம்.

நான் அறிந்த வகையில் பெண் குழந்தை செல்வங்கள் ..நாஸ்காம் இல் உள்ள அமைப்புகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் ..லிங்கிடின் போன்ற வற்றில் கணக்கு வைத்து தற்பொழுது உள்ள தகவல்களை தெரிந்துகொள்கிறார்கள் ..

நல்ல துறை, எதிர்காலம் வளமாக ஆக்கவல்ல துறை. கவனம். பொறுப்பு. ஒழுக்கம். இவை இருந்தால், சாதிக்கலாம். வளமாக வாழலாம்.உங்கள் எதிர்கால கனவுகள் நிறைவேறட்டும் ..நன்றி ..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் சிவக்குமார்

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,)

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call ,வாட்ஸஅப்ப் or sms
[email protected]📚✍️🥰🌈🏘️🏡📡🚗

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் மு...
20/09/2022

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:[email protected]
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)

Coimbatore,Pollachi, Udamalpet.

கேள்வி : அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது, தூண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகிய முறைகளில் உள்ள நிறைகுறைகள் என்ன? எந்த முறை ...
06/09/2022

கேள்வி : அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது, தூண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகிய முறைகளில் உள்ள நிறைகுறைகள் என்ன? எந்த முறை சிறந்தது?


என் பதில் :

அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவது,இதை சரியாக சொல்லனும்னா Load bearing structure என்று ஆங்கிலத்திலும், தமிழில் தாய்சுவர் முறை என்று சொல்லலாம்.

இந்த (Load bearing structure)தாய்சுவர் முறையில் மொத்த எடையானது(DL+LL+WL) சுவரின் வழியாக தரையை(Ground) சென்றடையும்.

இதன் நிறைகள்:

· இதில் கற்களை(செங்கல்(அ)மற்ற வகையான கற்கள்) மட்டும் பயன்படுத்தி சுவர் எழுப்பி வீடு கட்டபடுவதால், column(தூண்) தேவை இல்லாததால்,அதற்கு பயன்படுத்தபடும் கான்கிரீட்,கம்பிகள்( reinforcement details) தேவை இல்லாததால் வீட்டின் செலவு குறையும்.

· இந்த முறையில் வீடு கட்டும்போது framed structure ஐ விட குறைவான நேரத்தில் வீடு கட்டிமுடிக்க முடியும்.

· இது மிகவும் பழமையான மற்றும் எளிமையான வீடு கட்டும்முறை.குறைந்த அளவிலான உபகரணங்கள்(construction tools) போதுமானது.


குறைகள்:



· இதில் சுவர் மூலம் மொத்த எடை தரைக்கு செல்வதால், கீழ்தளத்தில் எந்த இடத்தில் சுவர் இருக்கிறதோ மேல்தளத்திலும் அதே இடத்தில் சுவர் எழுப்பப்பட வேண்டும்.சுவரை(அறையை) மாற்றி அமைக்க இயலாது.

· இந்த முறையில் அதிகபட்சம் (G+2) இரண்டு மேல்தளங்கள் வரை மட்டுமே அமைக்க முடியும்.

· Shallow foundation: கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் இருக்கும் இடத்தில் மட்டுமே இந்த முறையில் வீடு கட்டுவது சாத்தியமாகும்.

· வீட்டின் அனைத்து சுவர்களுமே 9"(இன்ச்) தடிமன் உள்ளதாக அமைக்க வேண்டும்.framed structure-ல் உள்ளது போல் வீட்டின் உட்பகுதியில் உள்ள சுவர்களை 4.5"(இன்ச்) க்கு அமைக்க முடியாது.எனவே வீட்டின் அறையின் அளவு(floor area (or)room area) சிறிது குறையும்.



Framed structure(column மற்றும் beam வைத்து கட்டுவது).இதில் மொத்த எடையானது(DL+LL+WL) slab - beam — column வழியாக தரையை சென்றடையும்.

நிறைகள்:

· இந்த நவீன முறையில் தான் அனைத்து வானுயர் கட்டடங்களும் கட்டப்படுகிறது. எத்தனை மேல்தளங்கள் வேண்டுமானாலும் இம்முறையில் கட்டிக்கொள்ள முடியும்.

· கீழ்தளத்தில் உள்ள வீட்டின் அமைப்பை அப்படியே மேல்தளத்திற்கு மாற்ற தேவையில்லை.ஒவ்வொரு தளத்தின் அமைப்பையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

· எந்த வகையான மண் உள்ள இடத்திலும் இம்முறையில் வீடு கட்டிக் கொள்ளலாம்.


Load bearing structure உடன் ஒப்பிடும்போது இதில் எந்த குறையும் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

இந்த இரண்டில் எந்த முறை சிறந்தது ?… எதை தேர்ந்தெடுப்பது?…

நீங்கள் வீடு கட்ட போகும் இடத்தில் கடினமான மண்(hard strata) நான்கு அடிக்குள் கிடைக்கிறது மற்றும் நான் ஒரு 1500 சதுரஅடிக்குள் வீடு கட்டப்போகிறேன் மற்றும் இரண்டு மேல்தளத்திற்கு(G+2)மேல் தேவையில்லை என்றால் நீங்கள் தாராளமாக Load bearing structure (தாய் சுவர் முறை) ஐ தேர்ந்தெடுக்கலாம்.இதற்கு framed structure ஐ விட குறைவான செலவே ஆகும்.



இந்த Load bearing structure முறையில் வீடு கட்டும்போது Electrical fittings சுவரின் வெளிப்பகுதியில் தான் வரும்.



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


நன்றி.🙏🏡

சிவக்குமார் VK

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,)

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or Whatsapp 🏡
[email protected]🥰📚✍️🏘️🏡

28/07/2022

மண்ணால் மலர்ந்த மரபு வீடு!
இரும்பு,
சிமெண்ட் ,
சுட்ட செங்கற்கள்....
துணையின்றி
மண்ணால் மலர்ந்த மரபு வீடு!
பெரம்பலூர் அன்னமங்கலம்
------------_------------------------------------------
இரும்புத்தூண்கள்,
கெட்டியான சிமெண்ட் ரகங்கள், எரிக்கப்பட்ட செங்கற்கள் இவை எதுவும் இன்றி இன்று நவீனம் என்று கருதப்படுகின்ற வீடுகள் கட்டுவது சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது.
உள்ளூரிலே கிடைக்கின்ற கட்டுமான பொருட்கள், உள்ளூர் தொழிலாளர்கள் இவற்றைக் கொண்டு, காற்று ,ஒளி ,எப்போதும் ஏதுவான தட்பவெப்ப நிலை என்று மறந்து போன நமது மரபு கட்டுமான கலையை மீட்டெடுத்திருக்கிறார் இந்த மண்ணின் மைந்தர்.
அடிப்படையில் கட்டுமான பொறியாளர் ஆன ஜெகதீசன் தான் கற்ற நவீன பொறியியல் அறிவைக் கொண்டு மரபு கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
இன்று பெரு மாநகரங்களில் செய்யப்படுகின்ற உள்-புற வடிவத்தையும் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்.
சிவில் பொறியாளர் கல்வியை பெற்றிருக்கின்ற ஒவ்வொரு பொறியியல் வல்லுநரும் இந்த மரபுக் கட்டுமான கலையை நோக்கி பார்வையை திருப்ப வேண்டிய அவசியத்தை தமது பெரும் முயற்சியை கொண்டு வலியுறுத்தி இருக்கிறார்.
தமக்கான சொந்த இல்லத்தை ஊருக்கு உள்ளே ,வரிசையான தெரு வீடுகளுக்கு இடையே தமது குடியிருப்பை வடிவமைத்திருக்கிறார்.
தேவையான செங்கற்களை உள்ளூர் மண்ணைக் கொண்டே தயாரித்திருக்கிறார். ஆரோவில்லில் பயிற்சி முடித்த ஜெகதீசன் தமது இல்லத்தையே முன்மாதிரி இல்லமாக வடிவமைத்து குடி புகுந்து இருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஜெகதீசன் மரபுக் கட்டுமானம் குறித்த பயிற்சியினை வழங்குவதற்கும், வடிவமைத்து தருவதற்கும், கட்டடங்கள் கட்டித் தருவதற்கும் தயாராக உள்ளார்.
கட்டுமான கலையை கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், இக்கட்டுமான அமைப்புகளை தங்களுக்கு உருவாக்கிக் கொள்ள விரும்புவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
இக்கலையை மேலும் செம்மைப்படுத்துபவர்கள் இவருடன் கைகோர்த்து மரபு கட்டுமான கலையை மீட்டெடுக்கலாம்.
மரபுக் கட்டுமான கலை வல்லுனர் பொறியாளர் ஜெகன் (எ) ஜெகதீசன் அன்னமங்கலம்,
பெரம்பலூர் மாவட்டம்.
99436 77481, 87785 59363👍🏡📚✍️🤝

கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா? என் பதில் : 📚📚✍️✍️வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும்....
22/03/2022

கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா?

என் பதில் : 📚📚✍️✍️

வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும். அதில் சில பல அம்சங்கள் உள்ளன.

அது வீட்டு மனையாக இருக்க வேண்டும்.

விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

பொதுவாக, மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இது கிடையாது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது. அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இருக்கலாம். இதற்கு மாறாக, வீட்டுக்கடன் 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.

வீட்டு மனையுடன் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கும் போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்,உதாரணமாக 2 வருடங்கள், வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காவிடில், அது வீட்டுக் கடனாக கருதப்படாமல், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

வீட்டு மனைக் கடனுக்கு காலவரையறை குறைவாகையால், மாதாந்திர தவணை அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடனை விட, வீட்டு மனைக் கடனுக்கு வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

குறிப்பு : இடத்தின் மதிப்பு என்றும் இறங்காது ...அதன் மதிப்பு நீண்டகாலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ..உடனே பணமாக மாற்றமுடியாது ..

நன்றி ..🏠

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms

07/03/2022

Home loan for NRIs:
A few important steps to follow Home loan for NRIs:
The norms on home loans are not too different for a non resident Indian (NRIs), when compared to resident Indians. Of course, you would have to show documents that pertain to your non resident status, which is an important criteria while taking a NRI home loan.
Where to take loans?
Most of the Indians banks have branches abroad, with a very good extensive network in countries like the Middle East. For example, in certain countries there might not be branches, but, there would surely be an associate which acts on behalf of a bank or institution. For example,
These days online applications are also possible, but, you may have to scan and send the documents and would also have to go through the hassle of couriering the same.
Documents required:
As indicated before, one of the most important documents would be to prove your non-resident status, which is why things like a valid visa, labour card etc., are required.
Here are a list of some essential documents that are required.
1) Application form with photograph
2) Photocopy of the Employment Contract or Labour Contract. In case the contract is not in English the Housing Finance Company or Bank will ask for an English translation. 3) Latest salary certificate
4) Photocopy of the Identity card or work permit (Labour) as the case maybe.
5) Photocopy of latest work permit
6) Photocopy of valid resident visa stamped on the passport
7) Property related documents
😎 Processing fee cheque
A few other points to remember It's important to note that the payment for the EMI has to be made from an NRO/NRE account or remittance from abroad.
It's therefore preferable that you have a steady job and are also are able to fulfill EMI payments. It's also important to appoint a power of attorney for the loan. The interest rate on a NRI home loan is the same as that for a resident Indian.
Sivakumar.V.K

எனது மதிப்புமிக்க எனது நண்பர்களுக்கும் ,சொந்தங்களுக்கும் .வாடிக்கையாளர்களுக்கும் .எனது பக்கபலமாக வீட்டுநிதிஉதவி அளிக்கும...
02/11/2021

எனது மதிப்புமிக்க எனது நண்பர்களுக்கும் ,சொந்தங்களுக்கும் .வாடிக்கையாளர்களுக்கும் .எனது பக்கபலமாக வீட்டுநிதிஉதவி அளிக்கும் தனியார் மற்றும் வங்கிகளுக்கும் .என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
[email protected]

Address

Dhali Road
Udumalpet
642126

Alerts

Be the first to know and let us send you an email when Sivashyam associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share