17/03/2020
நாட்டிலேயே முதல் முறையாக இரவு நேர ஆதாா் சேவை மையம், கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ள அஞ்சல் பிரிப்பகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது:
இச்சேவை மையத்தை திருச்சி மண்டல அஞ்சல் தலைவா் சுமதி ரவிச்சந்திரன் திறந்து வைத்தாா்.
திருச்சி மண்டலத்தில் 380 அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் அனைத்திலும் ஆதாா் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக கும்பகோணத்தில் உள்ள RMS எனப்படும் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு நேர ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இரவு நேர ஆதாா் சேவை மையம் அலுவலக நாள்களில்
மாலை 5.20 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படும். இந்த மையத்தில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய விரும்பும் மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் பொதுமக்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
2019-20 ஆம் நிதியாண்டில் இதுவரை 2 லட்சம் ஆதாா் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இரவு நேர ஆதாா் சேவை மையம் பொதுமக்களின் ஒத்துழைப்புக்கேற்ப விரிவாக்கப்படும் என்றாா் சுமதி ரவிச்சந்திரன்
source:dinamani