31/10/2020
நல்ல குடும்பம் !
ஒரு ரிலேஷன் வீட்டுக்கு போயிருந்தபோது அவர் தன் பெண் குழந்தையுடன் அக்கவுண்ட் நோட் புக்க வச்சுண்டு குடும்ப வரவு செலவு கணக்கை சரிபார்த்துண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் வாப்பா முரளி வா என்று சொல்லிவிட்டு, தன் மகளிடம் இது என்னம்மா புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கனும்னு பணம் ஒதுக்கியிருக்க, இப்ப இது எதுக்கு அனாவசிய செலவு? ன்னு கேட்க அதுக்கு அந்த குழந்தை , அப்பா என் ஸ்கூல் யூனிபார்ம் உங்க பேன்ட் ஷர்ட்டுக்கு மாதம் நானூறு ருபாய் வரைக்கும் செலவாறது. நாமளே வாங்கிட்டா என்னன்னு அம்மா கிட்ட சொன்னேன் அவங்க உங்களை கேக்க சொன்னாங்க அதான் கொஞ்சம் பணம் ஒதுக்கிருக்கேன் பட்ஜெட் அப்ரூவ் பண்ணிடுங்கப்பா, ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிட்டோம்னா வர்ற மாசங்களில் இஸ்த்திரிக்கு செலவழிக்கும் பணம் கொஞ்சம் மிச்சமாகுமேன்னு சொல்ல இவரும் அதை அப்ருவ் பண்ணினார்.
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
படிக்கிற குழந்தைக்கு இப்பவே வீட்டு பட்ஜெட் போட கத்துக்கொடுக்கனுமா? ன்னு கேட்டேன் அதுக்கு அவர் சொன்ன பதில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதான் பகிர்ந்துட்டேன்.
எல்லாரும் தங்கள் குழந்தைகள் படிச்சா மட்டும் போதும்னு தேவையானத வாங்கிக் கொடுத்துட்டு மார்க் மார்க்ன்னு ரேங்கிங்கில் மட்டும் குறியா இருக்காங்க இதுங்களும் வாழ்க்கைக்கு அடிப்படை தேவை என்னன்னு தெரியாம அப்பா #சாம்பாதிக்கிறார், அம்மா #கொடுக்கறாங்க, நாம செலவழிபோம்னு டிகிரி வாங்கிறவரை ஒண்ணுமே தெரியாம இருக்காங்க. குடும்பத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை அவங்க கைல கொடுத்துவிட்டு நாம ஒரு பார்வையாளனா இருந்து பார்க்கும்போதுதான் அவங்களுக்கும்
ஓ குடும்பம்னா இவ்வளவு செலவு இருக்கா ? நம்ம அப்பாவுக்கு இவ்வளவுதான் சம்பளமா ? நாம இதுக்குள்ள தான் வாழணுமா?? ன்னு புரிஞ்சுக்குவாங்க நாம புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை.
அதான் பணத்தை பொண்டாட்டி கைல கொடுத்துட்டு பொண்ண விட்டு பட்ஜெட் போடச் சொல்வேன். சொன்னா நம்பமாட்ட நீ ! இத்தனை வருஷத்துல நானே எப்படியெல்லாம் பணத்தை #சேமிக்கலாம்னு தெரியாம இருந்தேன் என் பொண்ணு அதுல கெட்டிக்காரி. முன்னே வாரம் ஒருமுறை ஓட்டல் சினிமான்னு போய்ட்டு வருவோம் இப்ப என் மக அதை மாசம் ஒருமுறை ஆக்கிட்டா கேட்டா எதுக்குப்பா வேஸ்டா செலவழிக்கணும் அதான் டீவீ இருக்கு பார்த்துக்கோங்கன்னு என்னையே மடக்கிடுவா என்றார். ஓட்டலுக்கு போகவேண்டாம்பா அந்த காசுக்கு வீட்டில் சாமான் வாங்கிச் செஞ்சா பணத்துக்கு பணமும் மிச்சம் உடம்புக்கும் நல்லதுன்னு எனக்கே க்ளாஸ் எடுக்கறா இப்ப என் பொண்ணு என்ற அவர் முகத்தில் ஒரு பெருமிதம் இருந்தது.
இப்ப உள்ள சூழ்நிலைக்கு இதுதானே வேணும். எம்பிஏ #நிர்வாகம் படிச்சுட்டு தனிக்குடித்தனம் நடத்த தடுமாறுவதைவிட தன் #எதிர்கால தேவைக்கு முன்கூட்டியே திட்டமிடும் திறனை சின்ன வயசுலேயே குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது நல்லதுதானே.
#காப்பீடு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும்:
P Praveen Kumar
9952695599 / 6384065858
நன்றிங்க...