FaNs of Panagudi

FaNs of Panagudi பணகுடி

20/08/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

20/08/2025

கண்ணா, மத்த மாநாட்டுக்கு வர கூட்டமெல்லாம் ஒட்டா மாறுமான்னு தெரியாது.

ஆனா எங்க சொந்தங்கள் மாநாட்டுக்கு ரெண்டு நாள் முன்னாடியே தன் வீட்டு விழா மாதிரி வந்திருக்காங்க ❤️

கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும் 👍🔥 Avm Joseph Amalan Amalan Amal Danger Adv M S Valan Dinesh Jack Vijay tamilaga vettri kazhagam Vijay Mass Joseph Vijay Jeyapaul


#தமிழகவெற்றிக்கழகம்

#தவெக

10/10/2023

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் நம் பணகுடி மண்ணில்...T170திரைப்படம் படபிடிப்பின் போது....!

அழகிய நம்பி கோவில்.... திருக்குறுங்குடி...
10/11/2022

அழகிய நம்பி கோவில்.... திருக்குறுங்குடி...

29/10/2022

சைக்கிள்.........!,🌹🌹🌹

1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லஸ், ஹீரோ, BSA போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது.

கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,

இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.

எப்படி ஆயினும் ......
பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

25/10/2022
உலகத்துல இவர் ஏன் பெஸ்ட் பேட்ஸ்மேன்னு இன்னைக்கு ஆடுன  ஒரு மேட்ச் போதும் 💥💥💯Always King 🤩🤩
23/10/2022

உலகத்துல இவர் ஏன் பெஸ்ட் பேட்ஸ்மேன்னு இன்னைக்கு ஆடுன ஒரு மேட்ச் போதும் 💥💥💯Always King 🤩🤩

25/07/2022

திராவிட மாடல்...

அபசகுணமான ஆட்சி நிர்வாகம்.....

தினமும் தமிழகத்தில்எங்கு நோக்கினாலும் மரண ஓலம்...

இதுதான் திராவிட மாடலோ..

அபசகுணமான ஆட்சி..

இன்னும் என்னவெல்லாம் கேட்கபோகுதோ தெரியலயே..

திராவிடக்குரங்கு கையில் பூமாலையாக பாவப்பட்ட தமிழ்மக்கள்....

இறைவனுக்கு எதிரான ஆட்சியாக இருக்கும் போல...

17/07/2022

பணகுடி பகுதியில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளில் பகலில் கொள்ளையர்கள் நோட்டம் விட்டு இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கிறார்கள் இதுவரை போலீசார் எந்த ஒருநடவடிக்கையும் எடுக்க வில்லை வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று கருதபடுகிறது எனவே தெருக்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவுது சுற்றி திரிந்தால் போலீசார்க்கு தகவல் தெரிய படுத்துங்கள் பொதுமக்கள் விளிப்புனர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Address

Panagudi Road, Panagudi
Radhapuram
627109

Alerts

Be the first to know and let us send you an email when FaNs of Panagudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share