OSS Associates

OSS Associates Consultancy services available for:
A . Investment
(a).Fixed Deposits. (b).chit fund. (c).Mutual fund. (B).Life insurance:

(a).Term plans. (b). Pension plans. (C).

Endowment plans
(e). Health Insurance:

(a). Personal accident plan. Health insurance plans. (e). Senior citizens plan. (D). General Insurance:

(a). Personal accident plans. (b).House holder policy. (c).Shop keeper policy. (d).Fire& Burglary polcies for shops, institutions, factories. Motor Insurance. (f).Group policies for personal accident and medical.

# # # # # # #

10/12/2025

🔥 “1200 ஆண்டுகால மர்மம்! சோழர்களின் கடல்கடந்த வெற்றிக்குப் பின்னால் நின்ற அந்தப் பெண் தெய்வம்!”

சோழர்கள் என்றாலே
வீரத்திலும்…
போர்திறமையிலும்…
கடல் கடந்து ஆட்சி செய்த பெருமையிலும்…
இந்தி, உலகமே வியக்கும் ஒரு பேரரசு!

கடாரம்,
மியான்மர்,
தாய்லாந்து,
கம்போடியா,
ஸ்ரீலங்கா…
இப்படி பல நாடுகளிலும்
சோழர்களின் கொடி பறந்தது!

விஜயாலய சோழன்,
கரிகால சோழன்,
ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழன்…
இந்த மன்னர்கள் போன போரெல்லாம்
தோல்வி என்ற வார்த்தையே இல்லாமல்
வெற்றியுடன் திரும்பியவர்கள்!

ஆனால்…
👉 இந்த அசைக்க முடியாத வெற்றிக்குப் பின்னால்
ஒரு “பெண் தெய்வம்” இருந்தாள் என்றால்
நீங்கள் நம்புவீர்களா?

🌺 அந்த பெண் வேறு யாரும் அல்ல…

சோழர்களின் குலதெய்வம் —
“நிசும்பசூதனி அம்மன்!”

1200 ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றும் தஞ்சாவூரில்
அவள் கோயில் உயிரோடு நிற்கிறது!

🧿 நிசும்பசூதனி என்ற பெயர் எப்படி வந்தது?

ஒரு காலத்தில்
சும்பன்
நிசும்பன்
என்ற இரண்டு அரக்கர்கள்
மக்களையும்…
ரிஷிகளையும்…
தேவர்களையும்…
கொடுமைப்படுத்தி வந்தார்கள்!

அவர்கள் செய்த அட்டூழியத்தை தாங்க முடியாமல்
தேவர்கள் எல்லோரும்
அம்பிகையிடம் சரணடைந்தார்கள்…

அப்போது…
அம்பிகை உக்ர ரூபம் எடுத்தாள்!
இரு அரக்கர்களையும் வதம் செய்தாள்!

👉 நிசும்பனை அழித்தவள் என்பதால்
அவளுக்கு
“நிசும்பசூதனி”
என்ற திருநாமம் உருவானது!

📜 நிசும்பசூதனி – சோழர்களின் குலதெய்வம் என்பதற்கான ஆதாரம்?

இதற்கு மிக முக்கியமான ஆதாரம் உள்ளது!

✅ திருவாலங்காட்டுச் செப்பேடுகள்!

அந்த செப்பேடுகளில்
“சும்பன், நிசும்பனை அழித்த அந்த தேவியை
சோழர்கள் கோவில் எழுப்பி வழிபட்டனர்”
என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது!

மேலும்,
“தேவர்கள் வணங்கும் பாதங்களை உடைய தேவியை பூசித்து,
நான்கு கடல்களையும் ஆடையாக அணிந்த பூமியை
சோழன் எளிதாக ஆண்டான்”
என்று அந்த செப்பேடுகள் வரலாற்றுச் சான்றாக சொல்கின்றன!

👑 விஜயாலய சோழன் & நிசும்பசூதனி அம்மன்

கி.பி. 850-ம் ஆண்டில்
உறையூரில் சிற்றரசனாக ஆட்சியை தொடங்கிய
விஜயாலய சோழன்,
முத்தரையர்களை வீழ்த்தி
தஞ்சையை கைப்பற்றினான்!

பின்பு தலைநகரை
பழையாறையிலிருந்து – தஞ்சைக்கு மாற்றினான்!

👉 தனது ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம்
நிசும்பசூதனி அம்மன் தான்
என்று நம்பிய விஜயாலயன்…

அவளுக்காக
தஞ்சாவூரில்
ஒரு அழகிய கோயிலை கட்டினான்!

“என் ஒவ்வொரு போருக்கும் வெற்றியை நீயே தர வேண்டும்”
என்று வேண்ட…
அம்மன் நேரில் தோன்றி
வரமளித்ததாக
வரலாறு சொல்கிறது!

🛡️ தஞ்சையை காக்கும் காவல் தெய்வம்!

அந்த நாள் முதல்
நிசும்பசூதனி…

✅ சோழர்களின் குலதெய்வம்!
✅ தஞ்சையின் காவல் தெய்வம்!
✅ ஒவ்வொரு போர் வெற்றிக்கும் அடிப்படை சக்தி!

சோழர்கள் எந்தப் போருக்குச் சென்றாலும்…
👉 முதலில் நிசும்பசூதனியை வழிபட்ட பிறகே போர்க்களம் புறப்பட்டார்கள்!

🛕 1200 ஆண்டுகள் பழமையான அந்த கோவில் எங்கு?

இந்த புனிதமான கோவில்…

📍 தஞ்சாவூர் – கீழவாசல்
பூமால் ராவுத்தர் கோவில் தெருவில்
இன்றும் உயிரோடு நிற்கிறது!

✅ அம்மன் சிலை –
ஆறு அடிக்கும் மேலான உயரம்!
✅ இன்றும் பொலிவு மாறாமல்!
✅ கோவிலின் மற்றொரு பெயர் –
“வடபத்திரக்காளியம்மன்”

🌈 ஒரு சிறிய நம்பிக்கை…

👉 சோழர்களுக்கு எப்படி
நிசும்பசூதனி வெற்றியை வாரி வாரி கொடுத்தாளோ…
👉 அதேபோல நம்மையும்
வெற்றியின் பாதையில்
அவள் நிச்சயம் அழைத்துச் செல்வாள்!

தஞ்சை சென்றால்…
இந்த அம்மனை தரிசிக்காமல்
திரும்பவே வேண்டாம்!

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

10/12/2025

மூத்தோனை வணங்கு, வணங்கி பின் பயணம் தொடங்கு.....

மூத்தோனை வணங்கு, வணங்கி, வணங்கி. உன் தடைகளை அகற்று....

மூத்தோனை வணங்கு, வணங்கி, வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று......

மூத்தோனை வணங்கு, வணங்கி வணங்கி, உன் செயல்கள் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்பிற்கு ஆளாகு.....

மூத்தோனை வணங்கு வணங்கி, வணங்கி உன் குறை எல்லாம் அகற்றிக்கொள்......

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு என்று எம் முன் அமர்பவன். இளையோனாக இருந்தாலும், மூத்தோனாக இருந்தாலும் கூறுகிறோமே. ஏன்?

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு என்றால் அது மூப்பை குறிப்பதல்ல, அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோன் இறையின் அந்த வடிவம் விக்கினங்களை களையக்கூடியது.

எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக்கூடியது. எனவேதான் நாங்கள் எதை எடுத்தாலும். மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்."......

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

10/12/2025

சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்

இவருக்குத்தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்க நினைக்கிறமாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கல்ல

சிவாலயத்தை வலம் வரும்போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.

இவர்தான் லிங்கோத்பவர்.

ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க, அதற்கு அவர்,

ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்துநின்று, தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.

விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து மண்ணைக் குடைந்து செல்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து தங்களின் அடியை என்னால் காண இயலவில்லை எனச் சிவனிடம் சொல்கிறார்.

அன்னப்பறவையாகி விண்ணுலகம் சென்ற பிரம்மா, பல ஆண்டுகள் கழித்து வழியில் ஒரு தாழம்பூவைக் காண்கிறார்.

நீ எங்கிருந்து வருகிறாய் என பிரம்மா தாழம்பூவிடம் கேட்க அதற்கு அந்தத் தாழம்பூ, நான் சிவனுடைய தலையிலிருந்து வருகிறேன் எனக்கூறியுள்ளது.

அவருடைய தலை இன்னும் எவ்வளவு தூரம்னு பிரம்மா கேட்க,
நானே நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழே வந்துகொண்டிருக்கிறேன் என பிரம்மாவை அதிரவைத்துவிட்டது தாழம்பூ!

நான் உன்னைத் தலையிலிருந்து எடுத்து வந்ததாக சிவனிடம் சொல் என பிரம்மா கட்டளையிட,

இருவரும் சிவனிடம் பொய்யுரைத்து மாட்டிக்கொள்கின்றனர்.

கோவம்கொண்ட சிவன்,
பிரம்மா உனக்கு பூலோகத்தில் பக்தர்களே இருக்கமாட்டார்கள்,
உனக்கு ஆலயங்களும் எங்கும் இருக்காது,
தாழம்பூ இனி உன்னை யாரும் பூஜைக்குப் பயன்படுத்தமாட்டார்கள் என இருவருக்கும் சாபமிடுகிறார்.

உண்மை உரைத்த விஷ்ணுவே
உனக்கு, எனக்கு நிகரான ஆலயங்கள் பூலோகத்தில் இருக்கும் என அவருக்கு ஆசியும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை.

இறையனார் ஜோதி வடிவாக விஸ்வரூபம் எடுத்த நிகழ்வே கார்த்திகைத் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வை நடத்திய சிவபெருமான்தான் லிங்கோத்பவர் என வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் மட்டுமே லிங்கோத்பவர் வைத்து கட்டப்பட்டதாகச் சொல்வர்.

சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருக்க சில விதிமுறைகள் உண்டாம்.

புதிதாக கட்டப்பட்ட சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருப்பது அரிதே.

அதாவது லிங்கோத்பவர் இருக்கும் ஆலயங்கள் மிகப்பழமையான சிவாலயமாகும்.

சிவாலயம் சென்று வேண்டும்போது அது விரைவில் பலிக்க லிங்கோத்பவரிடமும் அதே வேண்டுதலைச் சொல்லவேண்டுமாம்.

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

10/12/2025

Welcome!!!.

16/08/2025
16/08/2025
15/08/2025

Share your videos with friends, family, and the world

ஓம் ஸ்ரீசாய்ராம் !!!.
15/08/2025

ஓம் ஸ்ரீசாய்ராம் !!!.

Om Sairam 🙏🙏🙏

15/08/2025
15/08/2025

ஆன்மீக நாட்குறிப்பு

Address

Pondicherry
PUDUCHEERY

Website

Alerts

Be the first to know and let us send you an email when OSS Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share