Chola Loans

Chola Loans All your financial needs at one roof

இனிய காலை வணக்கம் நட்புகளே.... நம் தாய் அறக்கட்டளை நடத்தும் தை மகளே வருக! என்ற பொங்கல் விழா வரும் ஜனவரி 8 ஞாயிறு பல்லடத்...
04/01/2023

இனிய காலை வணக்கம் நட்புகளே.... நம் தாய் அறக்கட்டளை நடத்தும் தை மகளே வருக! என்ற பொங்கல் விழா வரும் ஜனவரி 8 ஞாயிறு பல்லடத்தில் உள்ள வனாலய வளாகத்தில் நடைபெறுகிறதுஅது சமயம் உழவர்கள். கிராமிய கலைஞர்கள், மக்களுக்கும் மண்ணுக்கும் அறத்தோடு பணிபுரியும் மாந்தர்களை போற்றும் விதமாகவும்.
கிராமிய சந்தை .. பண்டைய கால பொருட்களின் கண்காட்சி.. பறை.. கம்பத்து ஆட்டம், நாட்டுப்புற பாடல்... கும்மியாட்டம் .. இவற்றுடன் பாரம்பரிய உணவும் உங்களுக்காக‌ ... அனைவரும் வருகை புரிந்து அன்பையும் அறத்தையும் விதைக்கும் தமிழர் திருநாளாக‌ இவ்விழாவை கொண்டாடுவோம் வாருங்கள்...🙏🙏🙏🌸🌸🌸

அப்பத்தாவும் பாட்டியும்சிரிக்கிறார்கள்..............................................கரியையும் சாம்பல்தூளையும்கொடுத்து பல...
09/02/2018

அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்..............................................
கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி
என்றபோது பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

பாசிப்பயறோ கடலைமாவோ
அரைத்துக்குளி என்ற போது
லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு
ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

இருமலோ தும்மலோ வந்த போது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்த போது
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன் துளசி தூதுவளைச்
செடி வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ கொண்டு வந்து
தந்த போது தூக்கி எறிந்து சீறி
ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு
கருப்பை பலுதடைந்த பின்பு
ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மனமாய் தந்தபோது
சன்புளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக்கூறி முகத்தில் அரைய
பதிலுறைத்துவிட்டு இன்று
வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத
வாழ்வு வந்த பின்பு
செக்கு நோக்கி ஓடுகின்றேன்
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு ஓடுகின்றேன்
மண்பானை வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.......

படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து மாடி மாடியாய்
குளீருட்டப்பற்ற அறையில் லட்ச
லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்
வாழ்வில் ஏது சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கோ இருந்து
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்..............................சிந்தனைத்தமிழ்..

மூத்தோர்சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்..

வணக்கம். சரித்திரம் பேசுவோம்!உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.இன்...
03/02/2018

வணக்கம். சரித்திரம் பேசுவோம்!
உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.

இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?

இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?

அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"

என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.

கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.

சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!
புராதான உணவுகளை உண்போம்!
வாழ்வதற்காக உண்!
உண்பதற்காக வாழாதே!
உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.
சரித்திரங்களை விதையுங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். "மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! " அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.

ஷேர் செய்யுங்கள். மற்றவர்க்கு சொல்லி கொடுங்கள்.

வணக்கம்.

03/01/2018
சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோNewstig11-18ஒரு மனித...
24/11/2017

சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ

Newstig11-18

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே

இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்

19/10/2017

நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.

அறிவியல்பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்து கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.

மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது.அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல.ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள்.ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல்பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.அவசர கோலத்தில் அவர்கள் அள்ளி தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.

ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

உண்மை தான் என்ன?

நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.

ஆனால்,1997 ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் வேறு விதமான முடிவுகளை உள்ளது. நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆதாரம்:
http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998

அறிவியல் ஆய்வு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிவு வருவது இயல்பானது தான்.எனவே நான் மேற்சொன்ன ஆய்வு முடிவுகளை புறம்தள்ளி வைத்து, விந்து உற்பத்தியை தடுக்கும் என்ற ஆய்வை ஏற்று கொள்வதாகவே இருக்கட்டும்.

நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்.நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர்,பேய்ப்புடல், பற்படாகம்,கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து.அதில் நிலவேம்பு என்பது 9இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.

இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பரப்புநர்கள் படித்ததுண்டா?அது தொடர்பான ஆய்வுகளை தேடியதுண்டா? கண்டிப்பாக செய்திருக்க மாட்டீர்கள். அப்படி தேடி படித்திருந்தால் இந்த குற்றச்சாட்டும், பரப்புரையும் நடந்திருக்காது.

எனவே அந்த ஆய்வுகளை இங்கே எழுதியுள்ளேன். படித்து பார்த்து விட்டு அறிவியல் பேசுங்கள்.

சுக்கு(Zingiber officinale):
https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.

Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of te**is and epididymis.There were dose and duration dependent increase in s***m quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.

அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய te**is , epididymis எடையை அதிகரிக்கிறது, ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது.மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது..

https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.

Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.

கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):

http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf

Cisplastin என்ற மருந்தின் மூலம் விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.

பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):

http://www.webmedcentral.com/article_view/3498
one would observe reduction in the te**es weights (shrinkage) because, no s***matogenic activity occurred, as the s***matogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial s***matogenic state of the te**es were approached.

அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.

நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் நான் மேலே சொன்ன 3 மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.

நிலவேம்பும் மிளகும் மட்டும் விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உள்ளன.

(மிளகின் இந்த செய்கை அவதூறு பரப்புவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நேர்மையான ஆராய்ச்சியாளனாக தெளிவுப்படுத்துவது எனது கடமை.(ஆதாரம்- http://nopr.niscair.res.in/handle/123456789/5973)

ஆக நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படியுங்கள்.அல்லது சித்த மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.நிலவேம்பின் கெட்ட குணங்கள், மற்ற மூலிகைகளால் முறிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

டெங்கு உயிரியல் ஆயுதமாக நம் நாட்டின் ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.(பூச்சாண்டி காட்டவில்லை, Indian defence studies and analyses என்ற மத்திய தன்னாட்சி பாதுகாப்பு துறை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான, கேப்டன் அஜய் லீலீயின் கட்டுரையை படிக்கவும்.இவர் பாதுகாப்பு துறை ஆய்வுக்கான கே.சுப்பிரமணியம் விருதை பெற்றவர்- https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006)

இப்போது வதந்தி பரப்பும் சில நவீன மருத்துவர்கள் டெங்குவிற்கு மருந்தை கண்டுபிடித்து கொடுக்க யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்? ஆயுதத்தை ஏவியவர்கள் மருந்தையும் கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறார்களா?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆய்வு நடத்தி மருந்து கண்டுபிடித்து கொடுக்கும் வரை நிலவேம்பை விமர்சனம் செய்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் உங்கள் கடமையா?

மலேரியாவிற்கு மருந்து சிங்கோனா பட்டையில் இருந்து தான் வந்தது.ஆஸ்பிரின் என்பது வில்லோ மரப்பட்டை பல கட்ட ஆய்வுக்கு பின் உருமாறி வந்தது தான்.உங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவர் கொடுக்கும் நிலவேம்பு குடிநீரை ஆய்வு செய்து நீங்கள் கற்ற நவீன மருத்துவ அறிவியலுக்கு உங்கள் பங்களிப்பை செய்திருக்கலாமே.

டெங்குவிற்கு சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி விட்டு clinical trial செய்தீர்களா? Case report இருக்கிறதா? என்று கேட்பது அறிவுடமையா?

2012 ஆண்டு முதல் தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகிறது.அரசு சித்த மருத்துவர்கள் கௌரவம் பார்க்காமல் நிலவேம்பு குடிநீரை டீ கேனில் எடுத்து கொண்டு தெருதெருவாக கொடுத்து வருகின்றனர்.இதில் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மருந்தாளுனர்கள் துணை கிடையாது.குடிநீர் காய்ச்சுவது முதல் மருத்துவமனையை சுத்தம் செய்வது வரை இவர்கள் தான் ஆல் இன் ஆல்.

NRHM சித்த மருத்துவர்களோ, தினக்கூலியாக வேலை பார்த்து கொண்டே,தங்களின் நிரந்தர வேலைக்கு குரல் கொடுத்து கொண்டே தெருதெருவாக நிலவேம்பு குடிநீரை கொடுத்து சமூக மருத்துவர்களாக தமிழத்துக்கு கடமை ஆற்றி வருகிறார்கள்.
இவர்களின் வியர்வை சிந்தும் பணி தான் நிலவேம்பு குடிநீர் என்ற மக்கள் மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

Clinical trial செய்ய வேண்டும் என்றால் Integrative treatment செய்ய அவர்களுடன் சேர்ந்து நவீன மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.
இல்லை,நான் ஏதாவது மருந்து கம்பெனி ஆய்வு நடத்தி அறிவிக்கும் வரை காத்து கொண்டிருப்பேன், நேரம் போகாமல், நுனிபுல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்புவேன் என்று இருந்தால், காத்திருங்கள்.

அதுவரை செத்து கொண்டிருக்கும் நோயாளிகள் காத்து கொண்டிருக்க மாட்டார்கள்.அவர்களுக்காக சித்த மருத்துவர்கள் மக்களுக்கு ஆற்றும் சமூக கடமையை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

The possible testicular toxicity of Andrographis paniculata, Nees (Acanthaceae) standardized dried extract was evaluated in male Sprague Dawley rats for 60 days. No testicular toxicity was found with the treatment of 20, 200 and 1000 mg/kg during 60 days as evaluated by reproductive organ weight, te...

15/10/2017

இன்று முக்கியமான நாள்...!!!

தமிழக வரலாற்றில் வரலாற்று பிழை நிகழ்ந்த நாள்....

மாமனிதர் காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..

ஏன் காமராஜர் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் என்ன கொடுமைகள் அவரது ஆட்சியில் நடந்தது

1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% கொடுமை நெம்பர் 1 !

2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 !

3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன... கொடுமை நெம்பர் 3 !

4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின! கொடுமைகள் நெம்பர் 4)

இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை...

இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட" பொன் நாள்" இந்த நன்னாள்!

ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..

இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்!

"தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்!

அந்த மாபெரும் எளிய மனிதன்

காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்! ஆம்! 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்!

அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள் ! ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்!

தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 50வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை.......

Address

Palladam
641664

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+919488028535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chola Loans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chola Loans:

Share

Category