27/07/2026
சமீபத்தில் ஒரு Facebook பதிவின் கமெண்டில் செல்வராஜ் மாமா அவர்கள் மருத்துவ காப்பீடு தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்திருந்தார். அந்தக் கருத்துகளை மட்டும் படித்தால் மருத்துகாப்பீடு
#இன்சூரன்ஸ்_என்றாலே_ஏமாற்றம்… கிளைம் கிடைக்காது… என்ற தவறான எண்ணம் பலருக்கும் உருவாகும்.
அவரை WhatsApp மூலம் தொடர்புகொண்டு, அவரது பாலிசி ஆவணங்கள் மற்றும் கிளைம் தொடர்பான ஆவணங்களை பெற்று அனைத்தையும் முழுமையாக படித்து ஆராய்ந்த பிறகே இந்த பதிவை எழுதுகிறேன்.
என் நோக்கம் யாரையும் #குறை_கூறுவது_அல்ல.
#உண்மையான_தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
Facebook கமெண்டில் குறிப்பிடப்படாத முக்கிய உண்மைகள்
1. அவர் எந்த மருத்துவ காப்பீட்டு ஆலோசகர் மூலமாகவும் பாலிசி எடுக்கவில்லை.
2. அவர் எடுத்திருப்பது தனிநபர் (Individual) மருத்துவ காப்பீடு அல்ல; Group Health Insurance.
3. ஒரு பிரபலமான வங்கியின் மூலம் வழங்கப்பட்ட Group Insurance திட்டத்தில் இணைந்துள்ளார்.
4. வங்கி வழியாக வழங்கப்படும் பல Group Health Insurance திட்டங்களில் Sub Limit, Room Rent Limit, Co-payment போன்ற நிபந்தனைகள் இருக்கும். அதனால், மருத்துவமனை பில் முழுவதும் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு.
்டுமே கிடைத்தது" – ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் பல நேரங்களில் காப்பீட்டு நிறுவனத்தின் தவறு அல்ல,,, பாலிசியின் விதிமுறைகளிலேயே இருக்கும்.
காரணங்கள்:..
- Sub Limit
- Room Rent Capping
- Package Restriction
- Policy Terms & Conditions
இவற்றை பாலிசி ஆவணத்தைப் பார்த்தால்தான் உறுதியாக சொல்ல முடியும்.
வங்கி மூலம் பாலிசி எடுத்தால் ஏற்படும் சிரமங்கள்
பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
1. யாரை தொடர்பு கொள்வது என்பது தெரியாது.
2. பாலிசி செய்து கொடுத்த அதிகாரி வேறு கிளைக்கு மாறியிருக்கலாம் அல்லது வேலையை விட்டிருக்கலாம்.
3. புதிய அதிகாரி புதிய பாலிசி விற்பனையில் அதிக கவனம் செலுத்துவார்.. பழைய பாலிசி சேவைக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம்.
4. அவசர நேரங்களில் உடனடி வழிகாட்டுதல் கிடைக்காமல் போகலாம்.
அனுபவமுள்ள தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஆலோசகரிடம் பாலிசி எடுத்தால் கிடைக்கும் நன்மைகள்
1. பாலிசி தேர்விலிருந்தே சரியான வழிகாட்டுதல்.
2 கிளைம் நேரத்தில் தேவையான ஆவணங்கள் குறித்து உதவி.
3. மருத்துவமனையுடன் ஒருங்கிணைப்பு.
4. Cashless / Reimbursement நடைமுறைகளில் ஆலோசனை.
5. Claim Rejection வந்தாலும் காரணத்தை ஆய்வு செய்து மேல்முறையீடு செய்வதில் வழிகாட்டுதல்.
6. தேவையான நேரங்களில் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய நபர்.
மேலும் ஒரு முக்கிய வித்தியாசம்
Group Health Insurance
GST உள்ளது
No Claim Bonus கிடையாது.
Individual Health Insurance
தற்போது தனிநபர் மருத்துவ காப்பீட்டிற்கு GST இல்லை.
No Claim Bonus போன்ற பல கூடுதல் நன்மைகள் உள்ளது.
நீண்டகால பாதுகாப்புக்கு ஏற்றது.
எனது வேண்டுகோள்
ஒருவர் Facebook-ல் எழுதிய ஒரு கமெண்டை மட்டும் வைத்து எந்த மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தையும் குறை சொல்ல வேண்டாம்.
ஒரு கிளைம் ஏன் குறைக்கப்பட்டது? ஏன் நிராகரிக்கப்பட்டது? என்பதை பாலிசி ஆவணங்கள், கிளைம் ஆவணங்கள், மருத்துவமனை பில்கள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சரியாக விளக்க முடியும்.
உண்மையான தகவல்களை முழுமையாக பகிர்ந்தால் மட்டுமே சரியான ஆலோசனையும் தீர்வும் வழங்க முடியும்.
உங்கள் மருத்துவ காப்பீடு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் உள்ளதா?
உங்கள் பாலிசி ஆவணங்களை அனுப்புங்கள்.
கிளைம் நிராகரிப்பு கடிதத்தை அனுப்புங்கள்.
Bill Assessment Sheet-ஐ அனுப்புங்கள்.
ஆவணங்களை ஆய்வு செய்து, என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்கி, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் வழிகாட்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
சென்னை ரங்கசாமி
மருத்துவ காப்பீட்டு ஆலோசகர்
📞 90800 58588
24×7 வழிகாட்டுதல் • பாலிசி ஆலோசனை • கிளைம் உதவி • ஆவண ஆய்வு
"பாலிசி விற்பனை செய்வது மட்டும் என் வேலை அல்ல;
கிளைம் கிடைக்கும் வரை உங்களுடன் இருப்பதே என் சேவை."
பின் குறிப்பு: ஒரு Facebook கமெண்டை மட்டும் வைத்து மருத்துவ காப்பீட்டை தீர்மானிக்காதீர்கள்! உண்மை தெரிய வேண்டுமெனில் ஆவணங்களை வைத்து மட்டுமே மருத்துவ காப்பீட்டை தீர்மானிக்க வேண்டும்