Shiva Trading Company

Shiva Trading Company Share trading and investment consultant. Commodities Trading.

16/01/2025
ஒரு கெட்டப் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டால், அதை விடுவது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவுக்கு ஒரு நல்ல பழக்கத்தை விட்டுவிட்டால் திர...
08/12/2024

ஒரு கெட்டப் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டால், அதை விடுவது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவுக்கு ஒரு நல்ல பழக்கத்தை விட்டுவிட்டால் திரும்ப ஆரம்பிப்பதும் கஷ்டம்!

But actually Tom n Jerry!
05/11/2024

But actually Tom n Jerry!

நான் அப்பத் தான் பாஜகவையும், திமுகவையும் ஒட்டுக்கா ஒரண்டை இழுத்து ஒரு பதிவு போட்டிருந்தேன். போட்ட பத்து நிமிஷத்துல ஐடிய ...
06/03/2024

நான் அப்பத் தான் பாஜகவையும், திமுகவையும் ஒட்டுக்கா ஒரண்டை இழுத்து ஒரு பதிவு போட்டிருந்தேன். போட்ட பத்து நிமிஷத்துல ஐடிய காணம்..

ஒரே படப்பிடிப்பு..

அப்படி ஒன்னும் தப்பாவும் எழுதலயேனு வேற குழம்புறேன்.. ரெண்டு மொபைலு.. ஒரு லேப்.. இங்கன ஓடறேன், அங்கன ஓடறேன்..

நைட்டு மணி பதினொன்னு.. ஒன்னும் தேறல..

எனக்கு மட்டும் போயிட்டதா confirmation bias ல விழுந்துட்டேன். கை நடுங்க ஆரம்பிச்சுட்டு.. எப்படித் தூங்குனேன்னு எனக்கே தெரியல..

கார்த்தாலே ஓப்பன் பண்ணதுக்கு அப்புறம் தான் கை நடுக்கம் நின்னுச்சு...

அப்படின்னா அடிக்ட் ஆகிட்டேனா நானு..? ;)

15/02/2024

ஏட்டிக்குப் போட்டி

என் பல கிளையண்ட்ஸ் எனக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காமல் அவர்களாக டிரேட் செய்து கொண்டிருப்பார்கள். as long as they are in profits, அல்லது மார்க்கெட் ஏற்றத்திலேயே இருக்கும் வரை.

திடுதிப்பென்று விழுந்தாலோ.. volatility ஜாஸ்தி இருந்தாலோ கதவைத் தட்டுவார்கள். ஏன் சார் விழறது என்று மடத்துத் தெரு வேணு மாமா கேட்டார்.

ஏட்டிக்குப் போட்டி என்ற கட்டுரைத் தொகுப்பில் அமரர் கல்கி அந்த காலத்திலேயே இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறார்.

'ஏன் ஏறுதுன்னும் யாருக்கும் தெரியாது, ஏன் விழுதுன்னும் யாருக்கும் தெரியாது. எல்லாரும் வாங்கறா நாமளும் வாங்கறோம்.. எல்லாரும் விக்கறா நாமளும் விக்கறம்' - என்பதாக rhetoric க்கான பதிலாக இருக்கும்.

என் கணிப்பில் தேர்தல் வரையும் கூட மார்க்கெட் ஒரே பாதையில் sustain ஆகாது என்று கருதுகிறேன்.

நல்ல weightage உள்ள hdfc bank விழுந்திருப்பதும் பங்குச் சந்தை அதீத ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கு ஒரு காரணம். இன்றைய மார்க்கெட்டும் அப்படித் தான் இருக்கும்.

நிஃப்டி ஸ்பாட் 22000 க்கு மேல் close ஆனால்.. அதை ஒரு bullish indication ஆக எடுத்துக் கொள்ளலாம்.

தின வர்த்தகர்களுக்கு 21500ல் உளவியல் சப்போர்ட் இருக்கிறது.

தங்கம் இன்னும் கொஞ்சம் இறங்கும். நம் நாட்டு காசில் 60000, 59000 தொடும். அதையே வெள்ளியும் பின் தொடர்ந்து நகரும். கச்சா எண்ணெய் சற்று எதிர் திசையில் 6800 வரை வாய்ப்பிருக்கிறது.

அவ்வளவு தானா என்றா.. அவ்வளவு தான். இதற்கு மேலும் கணித்தால் நானெல்லாம் பணக் கடவுள் ஆகிவிடமாட்டேனா?

அன்றைக்கு அன்றைக்கே கணக்கை லாபமோ நட்டமோ முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று கருதி செயல்படுபவர்களுக்குத் தான்.. எண்களும், கோடுகளும், சூத்திரங்களும்..

முதலீடாகக் கருதி உள்ளே இயங்குபவரகளுக்கு மார்க்கெட் எப்போதும் நடுக்கடலில் அமைதியைத் தான் கொடுக்கிறது.

இதைத் தான் வேணு மாமாவிடமும் சொன்னேன். உண்மையில் என் யோசனைகள் எதுவுமே தேவைப்படாத அளவுக்கு அவர் ரொம்பவும் உஷார் பேர்வழியும் கூட.

Looking for those kind of people :)
09/02/2024

Looking for those kind of people :)

Address

Big Street
Kumbakonam
612001

Telephone

+919344897286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shiva Trading Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share