04/06/2021
Asset Bird Financial Consultancy
--------------------------------------------------
தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மத்திய மாநில அரசுகள் மானிய கடன்களை வங்கிகள் மூலம் வழங்குகின்றன. அவற்றில் முக்கியமான பிரபலமான திட்டங்கள் PMEGP, UYEGP மற்றும் NEEDS. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இந்த திட்டங்களில் கடன் வாங்க இயலாது.
இவற்றில் மொத்த செலவில் 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமாக அரசு வழங்குகிறது. தொழில் முனைவோர் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை முதலீடு செய்தால் போதுமானது. மீதம் வங்கி கடனாக கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு (எ.கா மளிகை கடை, துனிகடை) ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே UYEGP திட்டத்தின் மூலம் கடன் தரப்பட்டு கொண்டதை இப்போது அரசு ஐந்து லட்சமாக மாற்றி உள்ளது. ஒருவர் PMEGP திட்டத்தின் கீழ் 25 லட்சம் வரை உற்பத்திசார் தொழிலுக்கு, 10 லட்சம் வரை சேவைசார் தொழிலுக்கு அதிக பட்ச மொத்த திட்ட தொகையாக வைத்து கடன் பெறலாம்.
எங்கள் அசெட் பார்டு கன்சல்டன்சி உங்கள் தொழிலுக்கு பொருத்தமான திட்டத்தில் உங்களுக்கு விண்ணப்பித்து, சிறுகுறு நடுத்தர (MSME ) தொழில்களுக்கு கட்டாயமான உத்யம் சான்றிதழை பதிவு செய்து தரும். மற்றும் விரிவான துல்லியமான கடன் திட்ட அறிக்கை தயாரித்து தரும்.
உங்களுக்கு மாவட்ட தொழில் மையத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்பொழுது அணைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க நீங்கள் அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் எங்களிடம் கொடுக்க வேண்டியவை:
1. ஆதார் நகல்
2. பான் கார்டு (கட்டாயம் அல்ல)
3. ரேஷன் அட்டை தகல்
4. பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் /பள்ளி பதிவுத்தாள் (ஏதேனும் ஒன்று)
5. சாதிச்சான்று
6. தொழில் விவரம், மொத்த திட்ட மதிப்பு, செலவு விவரம்
7. முன் அனுபவம்
8. தொழில் தொடங்க போகும் இடத்தின் முகவரி
9. பாஸ்போர்ட் அளவு போட்டோ (.Jpg ஃபார்மாட்டில் வாட்சாப் பண்ணினால் போதும்)
இவற்றை தெளிவாக cam scanner அ Adobe Scan மூலம் ஸகேன் செய்து வாட்சப் பண்ணவும்.
முன்பணம் ரு. 500
திட்ட அறிக்கை தரும்போது ரூ. 1000