23/03/2026
Term insurance
Vs
Accident insurance
எந்த பாலிசி மிக அவசியம்?
நிறைய பேருக்கு இந்த குழப்பம் இருக்கலாம்.
குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பம் நிதி நிலையால் பாதிக்க பட கூடாது என்ற காரணத்தால் டேர்ம் இன்ஷுரன்ஸ் மிக அவசியம்..
மேலும் ஒருவர் எப்படி இறந்தாலும் ( பாலிசி எடுத்து 1 வருடத்துக்கு முன் தற்கொலை மூலம் இறந்தால் கவர் இல்லை)
டேர்ம் இன்ஷுரன்ஸ் மூலம் கவர் பெறலாம். வருமானம் ஈட்டும் நபர் மட்டுமே டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்கலாம்.
அதே நேரம் விபத்து காப்பீடு யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் இதற்கு வருமானம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விபத்து மூலம் இறந்தாலும், உடல் ஊனம் ஏற்பட்டாலும் கவர் பெறலாம்.
இப்பொழுது இதில் ஒரு பாலிசி தான் எடுக்க முடியும் இரண்டு பாலிசி சேர்த்து எடுக்கும் வகையில் நிதி நிலை இல்லை, போதுமான வருமானம் இல்லை என்ற நிலையில் எந்த பாலிசி தேர்வு செய்யலாம்?
என்னை பொறுத்தவரை விபத்து காப்பீடு தான் முதலில் எடுக்க வேண்டும்.
உடல் நலம் கூட நாம் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையில் வாழ்ந்தால் சமாளிக்க முடியும் ஆனால் விபத்து நம் கையில் இல்லை.
நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும் நமக்கு எதிரே வருபவர் கவனமாக இல்லை என்றால் விபத்து நடந்தே தீரும்.
உடல் ஊனம் ஏற்பட்டாலும் வருமானம் ஈட்ட முடியாமல் அவதி படுவோம்.
டேர்ம் இன்ஷுரன்ஸ் என்பது ஒருவர் இறந்தால் மட்டும் கவர் தரும் ஆனால் பல நேரங்களில் முக்கியமாக விபத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் ஆனால் உடல் ஊனம் ஏற்பட்டு இருக்கும் இந்த மாதிரி நிலையில் விபத்து காப்பீடு மட்டுமே கவர் தரும்.
முடிந்த அளவு டேர்ம் இன்ஷுரன்ஸ் மற்றும் விபத்து காப்பீடு இரண்டையும் எடுங்கள். அப்படி எடுக்க போதிய வருமானம் இல்லை என்றால் குறைந்த பட்சம் விபத்து காப்பீடு எடுங்கள். விபத்து காப்பீடு மூலம்
சாலை விபத்துகள் (Road Accidents)
இருசக்கர வாகனம், கார், பேருந்து அல்லது லாரி விபத்துகள்.
பாதசாரியாக செல்லும்போது வாகனம் மோதி ஏற்படும் காயங்கள்.
2. வீட்டில் ஏற்படும் விபத்துகள் (Domestic Accidents)
குளியலறையில் வழுக்கி விழுதல்.
மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுதல்.
சமையலறையில் ஏற்படும் சிலிண்டர் வெடிப்பு அல்லது தீ விபத்துகள்.
மின்சாரம் தாக்கி (Electric Shock) ஏற்படும் பாதிப்புகள்.
3. பயண விபத்துகள் (Travel Accidents)
ரயில் விபத்துகள்.
விமான விபத்துகள்.
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துகள்.
4. இயற்கை இடர்பாடுகள் (Natural Calamities)
இடி, மின்னல் தாக்கி ஏற்படும் பாதிப்புகள்.
வெள்ளம் அல்லது நிலச்சரிவில் சிக்கி ஏற்படும் உடல் காயங்கள்.
5. இதர விபத்துகள் (Other Common Accidents)
விழுதல்: மரத்தில் இருந்து விழுதல் அல்லது கட்டிட வேலைகளின் போது உயரத்தில் இருந்து விழுதல்.
விலங்குகள்: நாய் கடி அல்லது இதர விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்கள்.
மூச்சுத்திணறல்: எதிர்பாராத விதமாக நீரில் மூழ்குதல் (Drowning) அல்லது விஷவாயு கசிவு (Gas Inhalation).
தீக்காயங்கள்: எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகள்
போன்ற பிரச்சினைகளுக்கு கவர் பெறலாம். மேலும் விபத்து ஏற்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் ஏற்படும் இறப்பு/ ஊனத்திற்கு கவர் பெறலாம்
உங்களுக்கு ஏற்ற வகையில் காப்பீடு எடுக்க DM செய்யவும்.