Sri Jai Balaji Finance

Sri Jai Balaji Finance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Jai Balaji Finance, Financial service, Sait Colony, Erode.

Maruti SuzukiSwift VDINo Of Owners : 02Insurance : LiveNew BatteryNew TyreErode RegtnColor : WhiteCompany ServiceSold By...
19/09/2022

Maruti Suzuki
Swift VDI
No Of Owners : 02
Insurance : Live
New Battery
New Tyre
Erode Regtn
Color : White
Company Service
Sold By Car Owner.

Rs 5,30,000/-

18/11/2021

ஒரு நண்பரிடம் இருந்து...

27.10.2021 - அன்று எனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம்.மூலம் ரூ.5000/- எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

உங்கள் கணக்கிலிருந்து பணம் ஏதும் எடுக்கவில்லையென்றால் உடன் இந்த எண்ணை தொடர்பு கொள்க என ஒரு எண்ணும் தரப்பட்டிருந்தது.

நான் அப்படி எந்த பணமும் எடுக்கவில்லை. ஏ.டி.எம். கார்டும் என்னிடமே பத்திரமாக இருந்தது.

மேலும் ரூ.5000/- எடுத்தது போக என் கணக்கில் பேலன்ஸ் உள்ள தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனது கணக்குப்படி அந்த தொகையிலும் நிறைய வித்தியாசம் இருந்தது.

என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள உடனடியாக ஏ.டி.எம்.சென்று மினிஸ்டேட்மெண்ட் எடுத்துப் பார்த்தேன். அதில் ரூ.5000/- எடுத்ததற்கான குறிப்பு எதுவுமில்லை. தவிர எனது கணக்கில் இருக்க வேண்டிய பணமும் சரியாகவே இருந்தது.

இது குறித்த வங்கி ஊழியரான நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன்.

முன்பெல்லாம் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது, கணக்கில் பணம் போட வேண்டும் என விபரம் கேட்டு ஏமாற்றுவார்கள். அது கொஞ்சம் பழைய முறையாகி விட்டதால், தற்சமயம், நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி விபரம் கேட்டு, அதை வைத்து கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்தால் உடன் நாம் பதறிப் போய் அவர்கள் தந்துள்ள எண்ணை தொடர்பு கொண்டு விசாரிப்போம். அப்போது தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது, மீண்டும் உங்கள் கணக்கில் சேர்த்து விடுகிறோம். அதற்கு வங்கி கணக்கு விபரம் தாருங்கள் என்று கேட்டு ஏமாற்றி விடுவார்கள் என விளக்கினார்.

நாளுக்கு நாள் நூதன முறையில் ஏமாற்றுவது அரங்கேறி வருகிறது, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். நன்றி...

வந்த உபயோகமான பதிவு...

 #தித்திக்கும்  #தீபாவளி !!!உங்கள்  #புது  #வாகனத்தோடு இந்த  #தீபாவளியை கொண்டாடுங்கள் !!!உங்கள்  #பழைய மற்றும்  #புதிய வ...
24/10/2021

#தித்திக்கும் #தீபாவளி !!!

உங்கள் #புது #வாகனத்தோடு இந்த #தீபாவளியை கொண்டாடுங்கள் !!!

உங்கள் #பழைய மற்றும் #புதிய வாகனத்திற்கு நிதியுதவி செய்து தரப்படும் மிக குறைந்த வட்டியில் ...

வேறு நிதி நிறுவனம் மற்றும் #வங்கியில் இருந்தாலும் அதை செலுத்தி வங்கி கொள்ளும் வசதி

#வங்கி மூலம் பணம் செலுத்தும் வசதி, #இன்சூரன்ஸ் வசதியும் உண்டு

மேலும் தகவல் பெற

Sri Jai Balaji Finance

Mail : [email protected]

14/05/2021
வளைந்த முதுகும் நிமிர்ந்தே சொல்லிடும்விளைந்த வயலில் வியர்வை மின்னிடும்உயர்ந்த கட்டிடம் உவகைத் தந்திடும்உழைப்பின் மேன்மைய...
01/05/2021

வளைந்த முதுகும் நிமிர்ந்தே சொல்லிடும்

விளைந்த வயலில் வியர்வை மின்னிடும்

உயர்ந்த கட்டிடம் உவகைத் தந்திடும்

உழைப்பின் மேன்மையை உரக்கச் சொல்லிடும்

உழைக்கத் தெரிந்தவன் மனித சாதி

பிழைக்கத் தெரியாத இனத்தின் ஏமாளி

உழைப்பாளி உயரத் தோள் கொடுத்திடு

களிப்போடு வாழ வழிச் செய்திடு

வேர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்...

*பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? - நாளை இறுதி நாள்*பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேத...
31/03/2021

*பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? - நாளை இறுதி நாள்*

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதியான நாளையே இறுதி நாளாகும்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31-ம் தேதியான நாளைக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மார்ச் 31-க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அனைவரின் ஆதார் - பான் எண் இணைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே பலரும் ஆதார் - பான் எண்-ஐ வருமான வரி செலுத்தும் போது இணைத்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் சரியாக உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதாக என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

ஆதார் - பான் இணைப்பது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:

மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number ######XX என்ற செய்தி கிடைக்கும்.

🌹🍎

05/05/2020

*தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே அதை எடுத்து கொண்டால் இனிக்கும் மற்றவர்கள் அதைக் கொடுக்கும் போது கசக்கும்...*

*வாழ்க்கையில் வலிகள் உண்டு அதேசமயம் வழிகளும் உண்டு அதனால் தைரியமாக இருப்போம் எல்லாம் நல்லதே நடக்கும் என்று. காத்திருப்போம் வீட்டில் இருப்போம் நம்மை காப்போம் சமூகத்தை காப்போம்......*

*தன்னம்பிக்கை என்ற ஒன்றை உங்களிடம் இருந்து சீர்குலைக்கும் உயிர்க் கொல்லி நோய் தான் அச்சம். அதைப் போக்கும் மருந்தே தைரியம்.*

*உறவுகளோடு இருக்கும் போது இறைவனின் பார்வை நம்மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இருங்கள்.தன்னந்தனியாக இருக்கும் போது இறைவனே உங்களோடு இருக்கிறான் என்று நம்பிக்கையோடு இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும். வீட்டில் இருப்போம் நம்மை காப்போம் சமூகத்தை காப்போம்......*

*உங்களிடம் உள்ள சொத்துக்களையும் ....*
*அதன் உடன் வரும் சந்தோஷத்தையும் .....*
*அனுபவிக்க பல பேர் இருப்பார்கள் ...!!!*
*ஆனால் நீங்கள் நோயுற்றால் படும்* *வேதனையை உங்களால் மட்டுமே அனுபவிக்க முடியும் ...!!!*
*கொரோனா வந்தால் மரணத்தில் கூட யாரும் துணையில்லை ...!*
*நினைவில் வையுங்கள் ....!*

*எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கை பயணத்தின் இறுதி நிலை எதுவும் நம்முடையது இல்லை என்பதே..*
*நிதர்சனம்*

*அகம் முகம் மலர்ந்த என் இனிய நட்புகளுக்கு அன்பான காலை வணக்கம்*

*வாழ்க வளமுடன்.*

மாருதி சுசுகி நிறுவனத்தின் SWIFT  டீசல் கார்  நிறுத்தப்பட்டது (Discontinued). அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
17/04/2020

மாருதி சுசுகி நிறுவனத்தின் SWIFT டீசல் கார் நிறுத்தப்பட்டது (Discontinued). அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

💐💐💐💐💐💐              உ         லாபம் இன்று இனிதே உதயமான நிதி ஆண்டில் உங்கள் கடின முயற்சிகள் யாவும் கைகூடி நீங்கள் எல்லா வ...
01/04/2020

💐💐💐💐💐💐

லாபம்


இன்று இனிதே உதயமான நிதி ஆண்டில் உங்கள் கடின முயற்சிகள் யாவும் கைகூடி நீங்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்க்கையில் மேலும் உயர நல் வாழ்த்துக்கள்.

என்றும்,
என்றென்றும்...

அன்புடன்

Sri Jai Balaji Finance

25/03/2020

எண்ணிக்கை அதிகம் ஆகும்வரை சுய ஒழுக்கம் வராது..

எல்லாம் விளையாட்டு...

நாள் செல்லச் செல்ல இருக்கிக்கட்டிக்கிட்டு இருக்கப்போறாங்க எல்லோரும் !

வெருஞ்சோத்த ஆக்கி, தண்ணியும் உப்பும் போட்டு குடுச்சாலும் பரவால்ல, உசுரு தப்புனா போதும் ங்ற நெனப்பு வர்றப்போ தான்👇

உலகம் எப்படிப்பட்டது, எதற்கானது, நாம் யார், நம் உணவு எது, உயிர் எது !, அதன் உணர்வு எது, நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு எதற்கு, அறம் எது, தர்மம் எது என்ற சிந்தனையெல்லாம் ஓடி மெல்ல அடங்கும் ....

பகை இல்லை, பணம் இல்லை, எதுவும் உதவாது கோடீஸ்வரனையும் அன்றாடம் காய்ச்சியையும் ஒரே நிலையில் வீட்டோடு உக்கார வைத்த இந்த இயற்கையே பெரும் செல்வம் !

அதன் அடிவயிற்றில் கை வைத்தோம், அடிவயிறு கலங்கி நிற்கிறோம் !!

பூமி தன்னைத்தானே புதுப்பிக்கும் !!

தன் நோய்க்கு பாதகமானவற்றை அழித்தே தீரும் !
!
அதில் எது அழியுமோ அது அழிந்தே தீரும் !!!

இயற்கையை அழிப்பது தவறென்று தெரிந்தும் தவறு செய்துவிட்டோம்,

இறைவா நீ மற்ற உயிர்களை காப்பாற்ற, மனித இனத்தை அழிக்காதே !!

இனி நாங்கள் திருந்தும் நேரம் வந்துவிட்டது !!

இறைவா காப்பாற்று !!

நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்று..

இனி வரும் காலம் நமக்கானதாய் இருக்கவேண்டும் என்றால் தயவு செய்து,

#விழித்திரு #தனித்திரு #காத்திரு !!

எதுவும் செய்யாமல் இருப்பதே நாட்டிற்கு நாம் செய்யும் பெரிய உதவி !!

அனைத்தையும் வென்று உலக நாடுகள் முன் #ராஜநடை போடுவோம் !!

ாகரிகத்தின்_முன்னோடியான என் தேசத்தின் மீது நம்பிக்கை உள்ளது !!

வளமுடன் வாழும் எம் #பாரதம்

Address

Sait Colony
Erode
638001

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Jai Balaji Finance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share