Mutual FUND Awarness

Mutual FUND Awarness MUTUAL FUND ஐ பற்றி தெரிந்து கொள்ள !!!! இங்கே ப?

Mutual fund awareness program in dharmapuri
20/01/2019

Mutual fund awareness program in dharmapuri

08/01/2019
31/12/2018
23/12/2018

*Pension with SBILIFE*

*555 scheme*

*1.Pay 5 lak for 5 years...Get 5 lak pension from 10th year..*

*2.Guarantee Bond Fund Returns..*

*3.Free Life cover up to 50 lak.*

*4.Flexibility in pension -14 options for you & your spouse with ROP.*

*5.Tax benefits U/S 80(C) & 10(10)d.*

Contact for best offer's & service:
Name: Vijayakumar
Number: 97907 77865

19/12/2018

Check out simply and more securely done your work with us
14/12/2018

Check out simply and more securely done your work with us

Mutualfund performance over the year
11/12/2018

Mutualfund performance over the year

  I am one of the Distributor in AMFI
11/12/2018

I am one of the Distributor in AMFI

07/12/2018

உங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய 14 மியூச்சுவல் ஃபண்டுகள்!
ஶ்ரீகாந்த் மீனாட்சி
சேமிப்பை செல்வமாக மாற்றுவதற்கு சிறந்த வழி பங்குச் சந்தை முதலீடுகளே. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளாமல், அதேசமயம் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் அனைத்து நன்மைகளும் பெற நினைப்பவர்களுக்கு ஏற்ற சாதனம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்தான்.

பல்வேறு ஃபண்ட் வகைகளிலிருந்து மொத்தம் 14 ஃபண்டுகள் (7 ஃபண்ட் வகையிலிருந்து ஒவ்வொன்றிலும் தலா இரண்டு ஃபண்டுகள்)தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறோம். இந்த 14 ஃபண்டுகளையும் ஒருவர் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க வேண்டுமென்பதில்லை.

இவற்றில் உங்களுக்குத் தேவையான 5-6 ஃபண்டுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

லார்ஜ்கேப் ஃபண்டுகள்

ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட்

இந்த ஃபண்ட் தொடர்ச்சியாக நல்ல நிர்வாகம் அமையப் பெற்றது. நல்ல சந்தைச்சூழலில் சந்தை லாபத்தைவிட சற்று அதிகமாக வருமானம் அளித்துவருகிறது.
அதேநேரத்தில், மோசமான சந்தைச் சூழலில் சந்தை நஷ்டத்தைவிடக் குறைவாக இழப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் ஃபண்ட் இது. இந்த ஃபண்டின் வருமானம் இதன் பெஞ்ச் மார்க்கைவிட ஏற்றத் தாழ்வுகள் குறைவாக இருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட்

ஆரம்ப நாள்கள் முதலாகவே லார்ஜ்கேப் ஃபண்டாகத் திகழ்ந்துவரும் ஃபண்ட் இது. ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும் குறைந்த விலையில் தரமான பங்குகளை வாங்க முயற்சி செய்யும் முதலீட்டு அணுகுமுறையை இந்த ஃபண்ட் கடைப்பிடிக்கிறது.

சந்தைச் சரிவு காலங்களில் சிறப்பான நிர்வாகத்தால் நஷ்டத்தை மட்டுப்படுத்து வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

லார்ஜ் அண்டு மிட்கேப் ஃபண்டுகள்

மிரே அசெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட்

கொரிய நாட்டினைச் சேர்ந்த மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினைத் தொடங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவர்களது புகழ்பெற்ற இரு ஃபண்டுகளில் ஒன்று, எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட். இந்த ஃபண்ட் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் எடுப்பவர்களுக்கு உகந்தது.

ஆனாலும், ரிஸ்குக்கு ஏற்ற லாபத்தைக் கொடுத்து வந்திருக்கிறது. பங்குத் தேர்வில் மிகச் சிறப்பான செயல்பாட்டைக் காண்பிக்கிறது. பொருளாதாரச் சூழலில் எந்தப் பகுதி நன்கு லாபம் தரும் என்பது போன்ற கணக்குகளைத் தவிர்த்து, எந்த நிறுவனங்கள் சிறப்பாக உள்ளன என்ற எளிமையான முறையில் பங்குத் தேர்வினைச் செய்யும் ஃபண்ட் இது.

டி.எஸ்.பி ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்

இந்த ஃபண்ட் பொதுவாக சந்தையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து முதலீடு செய்யும் முறையைப் பின்பற்றும் வகையானது. வாய்ப்பு என்னும்போது ஒரு நல்ல நிறுவனப் பங்கு ஏதோ ஒரு காரணத்திற் காக விலை குறைந்து காணப்படும்போது, சட்டென்று சென்று அதில் முதலீடு செய்யும் முறை. இதில் தேர்ச்சி பெற்ற விதத்தில் இந்த ஃபண்ட் செயல்பட்டு வருகிறது.

இந்தக் காரணத்தால், சில சமயங்களில், வீழ்ச்சி அடையும் சந்தைச் சூழலில், இந்த ஃபண்ட் கொஞ்சம் அதிகமாக விழ வாய்ப்பு உண்டு. இருப்பினும், மேலெழும்போது மிக அதிக லாப சாத்தியங்கள் உண்டு. எனவே, சற்றுப் பொறுமையுள்ள முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்க உகந்தது டி.எஸ்.பி ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகும்

மல்டிகேப் ஃபண்டுகள்

ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட்

சில மாதங்களுக்குமுன் வரை ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் என்று அழைக்கப்பட்ட இந்த ஃபண்ட் நீண்ட பாரம்பர்யம் கொண்ட சிறப்பான ஃபண்டாகும். அவ்வப்போது தொய்வான காலங்கள் இருப்ப தாலும், இந்த ஃபண்ட் வகையே சற்று ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த வகை என்பதாலும், முதலீட்டாளர் கள் இந்த ஃபண்டை ஒரு நீண்ட கால நோக்கிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும்.

பராக் பரிக் லாங்டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்

இந்திய ஃபண்ட் உலகில் சமீபத்தில் உருவாகிய ஃபண்ட் நிறுவனங்களில் சற்று வித்தியாசமானது பராக் பரிக் நிறுவனம். புகழ்பெற்ற முதலீட்டாளர் பராக் பரிக்கினால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், வேல்யூ முதலீட்டு முறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த ஃபண்டில் அமெரிக்க நிறுவனங்களில் (கூகுள், ஃபேஸ்புக்) சுமார் 30% முதலீடு செய்வதால், ஒரு சர்வதேசத் தன்மையும் கொண்டது.

மிட்கேப் ஃபண்டுகள்

இந்த வகையான ஃபண்டுகள், சந்தையில் உள்ள நடுத்தர அளவு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகள். இத்தகைய நிறுவனங்களின் பங்குகளுக்கு லாப சாத்தியம் அதிகம்.

அதேபோல், திடீர் சரிவுகளும், நஷ்டங்களும்கூட சாத்தியம். இந்த வகையில் ஃபண்ட் தேர்வு செய்யும்போது நிலையாக லாபம் தரும் ஃபண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்

சென்ற வருடம் பங்குச் சந்தையில் சிறிய நிறுவனங்களுக்கு ஒரு மோசமான வருடமாகும். இந்த நிறுவனங்களின் பெஞ்ச் மார்க்கான நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ் -28% என்ற அளவில் நஷ்டம் அடைந்திருக்கிறது.

இத்தகைய சூழலில், ஹெச்.டி.எஃப்.சி-யின் இந்த ஃபண்ட் ஏறத்தாழ மிகக்குறைந்த நஷ்டமடைந்தது சாதனைதான். இந்த வகையில் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்தாலும் நல்ல மார்க்கெட்டில் அதிக லாபமும் மோசமான சூழ்நிலையில் குறைந்த நஷ்டமும் தரும் ஃபண்ட் இது.

ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்

மிட்கேப் ஃபண்டுகளின் உலகின் கதாநாயகன் இந்த ஃபண்ட். நெடுங்காலமாக இந்த ஃபண்ட் வகையில் மற்றவற்றைவிடச் சிறப்பாகச் செயல்படும் ஃபண்ட் இது. பலபல பங்குகளைத் தனது முதலீட்டுத் தொகுப்பில் கொண்டிருப்பதால், ஒரு பங்கின் வீழ்ச்சி இந்த ஃபண்டின் மதிப்பை அதிகம் பாதிக்காது.

கடந்த ஐந்து வருடங்களில் ரோலிங் ரிட்டர்ன்படி, 90% முறை தனது பெஞ்ச் மார்க்கான நிஃப்டி மிட்கேப் 100-ஐவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. கொஞ்சம் ஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருந்தாலும், தொலைநோக்கில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருகிற ஃபண்ட் இது.

ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா

ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைவாக எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்ட் வகையில், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமாவைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த ஃபண்ட் மிட்கேப் உலகில் சற்று பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யும் ஃபண்ட்.

இதனால், இதன் ஏற்றத் தாழ்வு விகிதங்கள் சற்று குறைவாக இருக்கும். வீழ்ச்சியடையும் சந்தைக் காலங்களில் இந்த ஃபண்டின் மதிப்பு சற்றுக் குறைவான வீழ்ச்சியைச் சந்திக்கும்.

ஸ்மால்கேப் ஃபண்டுகள்

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்

முந்தைய பகுதியைப் போலவே, கொஞ்சம் ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புபவர்கள் ஃப்ராங்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டினைத் தேர்த்தெடுக்கலாம். மிகப் பெரிய பங்குத் தொகுப்பு, தேர்ச்சி பெற்ற நிதி நிர்வாகி, மிகப் பெரும்பான்மையான சமயங்களில் பெஞ்ச் மார்க்கைவிடச் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றால் தனக்கென்று ஓர் அடையாளம் பெற்ற ஃபண்ட் இது.

ஈக்விட்டி ஓரியன்டட் ஹைபிரீட் ஃபண்டுகள்

ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்ட்

இந்த ஃபண்ட் வகையின் முடிசூடா மன்னன் இந்த ஃபண்ட். பல்வேறு சந்தைச் சூழல்களிலும், பல்வேறு காலகட்டங்களிலும் இந்த வகை ஃபண்டுகளில் முதன்மையாக இருக்கும் ஃபண்டுகளில் இது எப்போதும் இருக்கும்.

அதிக ரிஸ்க் உள்ள பங்குகளில் சில சமயம் முதலீடு செய்தாலும், தனது மொத்த பங்குச் சந்தை முதலீட்டு அளவை 65-70% என்கிற அளவுக்குள் வைத்திருப்பதால், ஃபண்டின் மொத்த ரிஸ்க்கைக் கட்டுக்குள் வைத்திருக்கும். முக்கியமாக மோசமான சந்தையில் நஷ்டத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பான ஃபண்ட் இது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஈக்விட்டி அண்டு டெப்ட் ஃபண்ட்

இந்த ஃபண்ட் வகையில், காலம் காலமாக நன்கு செயல்பட்டு வரும் மற்றுமொரு ஃபண்ட் இது. கடன் சந்தை முதலீடுகளிலும் சற்று ரிஸ்க் அதிகம் எடுத்து லாபம் ஈட்டித்தர முயற்சி செய்யும் ஃபண்ட் இது. பங்குச் சந்தை முதலீடுகள், கடன் சந்தை முதலீடுகள் ஆகிய இரண்டிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு லாப சாத்தியங்களைப் பெருக்க முயற்சி செய்யும்.

இந்தக் காரணத்தால் கொஞ்சம் சராசரியைவிட ஏற்றத் தாழ்வுகள் அதிகம். இருப்பினும் லாபம் ஈட்டுவதில் சளைக்காமல் தன்னை நிரூபித்து வருகிறது.

கடன் சந்தை ஃபண்டுகள்

ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் டெப்ட்

கடன் சந்தை ஃபண்டுகள் எத்தகைய காலகட்டத்திற்குக் கடன் கொடுக்கின்றன என்ற அடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன. குறைவான காலகட்டத்திற்குக் கடன் கொடுப்பவை ரிஸ்க் குறைவாகவும், நீண்ட காலக் கடன் கொடுப்பவை ரிஸ்க் அதிகமாகவும் உள்ள ஃபண்டுகள்.

ஹெச்.டி.எஃப்.சி-யின் இந்த ஃபண்ட் குறைந்த காலகட்டக் கடன்களில் மட்டுமே முதலீடு செய்து நிதி நிர்வாகம் செய்யும் ஃபண்டாகும். அப்படி முதலீடு செய்யும்போது, நல்ல நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தால் மட்டுமே முதலுக்கு மோசமில்லாமல் வட்டியும் வந்துசேரும்.

அப்படிப்பட்ட தேர்வுகளைச் செய்து, அடிப்படையில் நல்ல முதலீட்டு லாபங்களைத் தந்துள்ள ஃபண்ட் இது. ஓரிரு வருடங்கள் முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஏற்ற ஃபண்ட்.

ஃப்ராங்க்ளின் இந்தியா கார்ப்பரேட் டெப்ட் ஃபண்ட்

கடன் சந்தை ஃபண்டுகளிலேயே மிகவும் திறமான நிதி நிர்வாகி எனக் கருதப்படும் ஒருவரால் நிர்வகிக்கப்படும் இந்த ஃபண்ட், பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்து, அதன்மூலமான வட்டியினால் முதலீட்டாளர்களுக்கு லாபம் சம்பாதித்துத் தரும் ஃபண்ட் இது.

இப்படி முதலீடு செய்யும்போது நிறுவனங் களின் தரத்தினை மிகத் துல்லியமாக ஆராய்ச்சி செய்து, தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதில் மிக அதிக தேர்ச்சி பெற்ற நிதி நிர்வாகி வாய்த்திருப்பதால், ரிஸ்க் அதிகமுள்ள இந்த ஃபண்ட் வகையிலும், நிலையான லாபத்தினை ஈட்டிக் கொடுத்திருக்கும் ஃபண்ட் இது. மூன்றாண்டு காலத்திற்கு முதலீடு செய்ய ஏற்ற ஃபண்ட்.

- ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

எப்படித் தேர்ந்தெடுத்தோம்?

* ரோலிங் ரிட்டர்ன் எனப்படும் தொடர்ச்சியான லாபக்கணக்குதான் ஒரு ஃபண்டின் செயல்திறனைச் சிறப்பாகக் குறிக்கும் அளவுகோலின்படி ஃபண்டுகளைத் தேர்வு செய்திருக்கிறோம்.

* சமீபத்தில் மட்டுமல்ல, சென்ற 5, 10, 15 ஆண்டுகளில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

* பல்வேறு சந்தை ஏற்ற இறக்க சூழ்நிலைகளில் ஒரு ஃபண்ட் எப்படிச் செயலாற்றியது என்றும் பார்த்திருக்கிறோம். ஏற்றமான சூழலில் மட்டும் நன்கு லாபம் கொடுக்கும் ஃபண்டுகளால் அதிகம் பயனில்லை.

* மோசமான சந்தைச் சூழலில் நஷ்டத்தைச் சிறப்பாக மட்டுப்படுத்தும் ஃபண்டுகளுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்துள்ளோம்.

Address

CHOLA SECURITIES, OPP B1 POLICE STATION
Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when Mutual FUND Awarness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mutual FUND Awarness:

Share