18/03/2024
வணக்கம் நண்பர்களே!
முகமதியர்களின் வழிகாட்டி, தூதர் திரு முகமது நபியின் மொழிகளின்படி அதாவது அவர்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட முகமதிய சட்டம் அல்லது ஷரியத் சட்டப்படி (குரான் 2:275) வட்டி வாங்குதல் குற்றம்.
ஆகவே நம் முகமதிய சகோதரர்கள் வட்டி கொடுத்தல்/ வாங்குதல் செயல்பாடுகளை தவிர்ப்பார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் வட்டிதான் குற்றமே தவிர அவர்களுக்குள்ளும் வட்டி இல்லாமல் அதே நேரத்தில் பணம் கொடுப்பவர்களுக்கு வருவாய் கிடைக்கக் கூடிய வகையில் நிதி பரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதை அறிவீர்களா?
அவையாவன 1. Mudharabah (profit sharing), 2. Wadiah (safekeeping), 3. Musharakah (joint venture), 4. Murabahah (cost plus finance), 5. Ijar (leasing), 6. Hawala (an international fund transfer system), 7. Takaful (Islamic insurance), and 8. Sukuk (Islamic bonds).
அதாவது 1. முதராபா (லாபப் பகிர்வு), 2. வாடியா (பாதுகாப்பு), 3. முஷாரகா (கூட்டு நிறுவனம்), 4. முராபஹா (நிதி மற்றும் கட்டணம்), 5. இஜர் (குத்தகை), 6. ஹவாலா (ஒரு சர்வதேச நிதி பரிமாற்ற அமைப்பு), 7. தக்காஃபுல் (இஸ்லாமிய காப்பீடு) மற்றும் 8.சுக்குக் (இஸ்லாமிய பத்திரங்கள்)
என்ற பெயர்களில் நிதிப் பரிமாற்றங்கள் நடை பெற்று வருகின்றது.
அந்த வகையில் பல இஸ்லாமிய சகோதரர்கள் குறிப்பாக ஹஜ் பயணம் நிறைவு செய்தவர்கள் சீட்டு சேர்வதற்கு (வட்டி சம்பந்தப்பட்டுள்ளதாக கருதிக் கொண்டு) அவர்கள் மதச்சட்டம் அனுமதிக்காது எனத் தவறாக கருதிக்கொண்டு வேண்டாம் எனக் கூறி தவிர்க்கிறார்கள்.
ஆனால் சீட்டு சட்டப்படியும் சரி, உச்சநீதி மன்ற தீர்ப்பாணையின்படியும் சரி சீட்டு வரவு செலவில் வட்டி என்பது இல்லை.
அதாவது ஒரு சந்தாதாரர் தனக்கு சீட்டு தேவை என தள்ளி எடுக்கையில் அந்த தள்ளுதல் வட்டியாகக் குறிப்பிடப்படுவதில்லை. மாறாக தள்ளுபடி அல்லது டிஸ்கவுண்ட் என குறிப்பிடப்படுகிறது. அந்த தள்ளுபடித் தொகையில் செலவு தொகை ( போஃர்மேன் கமிஷன்) போக மீதமுள்ள தள்ளுபடித் தொகையை அந்த பணத்தைக் கொடுத்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் டிவிடெண்டாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதாவது "லாப பகிர்வாக" மட்டுமே கொள்ளப்படுகிறது.
அவ்வகையில் சீட்டு நிதிப் பரிமாற்றத்தில் கிடைக்கக் கூடிய வருவாயானது *முதராபா (லாபப் பங்கீடு)* ஆகும். அது போலவே சீட்டு நிதி பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பானது *முராபஹா (நிதி மற்றும் அதற்கான கட்டணம்)* ஆகும். எனவே சீட்டு நிதி பரிமாற்றத்தில் வட்டி என்ற நிலை இல்லை என்பதை அவர்களுக்கு அவர்களது சட்டத்தை மேற்கோள் காட்டியே தெளிவுபடுத்தலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,
நல்லது நடக்கட்டும்.