31/08/2021
(நன்றி திரு Tamilarasan.. lic Tamil)
#இந்தியா
தாய்நாடு
உயிர் வாழ்தலுக்கான
ஆதாரம் என்று தெரிந்தும்..
பொதுத்துறை நிறுவனங்களின்
மூச்சை நிறுத்த முயலும்
பேரறிவாளிகள் வாழும் தேசம்
கனியிருப்ப
காய் கவர்ந்தற்று
என்று உணர்ந்திருந்தும்..
தனியார் நிறுவனங்களில்
காப்பீடு செய்யும் அறியாமை
நிறைந்தோர் தேசம்
மார்பகம் வற்றினாலும்..
சிசுக்களின் தேவையறிந்து
பசி போக்கும் தாய்மை
குணம் கொண்ட LIC
நிறுவனம் உள்ள தேசம்
பொதுத்துறை பலவும்
மலர் வளையம்
சூடிய நிலையில்..
ஊழியர் உணர்வால்
உயிர் தப்பிப் பிழைக்கும்
உன்னத நிறுவனத்தின் தேசம்
இறப்பு உரிமத்தை
எவ்வாறு மறுதலிக்கலாம் என
குற்றம் கண்டுபிடிக்கும்
நிறுவனங்களின் மத்தியில்..
உரிமத்தை எப்படியாவது
தந்து விட பரிதவிக்கும்
இரக்கநிறை சிந்தனை
நிறுவனமாம் LIC உள்ள தேசம்
விதை நெல்லை விற்று..
தேசத்தின் சாபக் கேடாய் மாறாமல்..
உணர்ந்து தெளிந்து
பாரம்பரியம் காக்கும்
அரசை எதிர்பார்க்கும்
ஏமாளிகள் வாழும் தேசம்
அருமை உணராது ..
கோமாளிகள் கூத்தடிக்கும்
தேசமும் இதுவே .!
வாழ்க LIC.!
போற்றுவோம்
அதன் சேவையை.!
காத்திடுவோம்...
தலைமுறை
தலைமுறைக்காய்.!!
LIC தமிழ்.,