TMDL

TMDL தமிழ் மாநில தேசிய லீக்

 #கலைஞர்100
21/06/2023

#கலைஞர்100

Song: Kalaignar Enbathu oru soll alla (Kalaignar Karunanidhi Birthday Song)Singer: Iraiyanban KhuddhusLyrics: Kaviperarasu VairamuthuMusic: Asif IraiyanbanD...

சந்தனத் தமிழ் மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று.. அன்றைய ஜனநாயக கால, நேர்மையான நாடாளுமன்றத்தின் முதல் குரலாக ஒலித்து...
05/06/2020

சந்தனத் தமிழ் மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று.. அன்றைய ஜனநாயக கால, நேர்மையான நாடாளுமன்றத்தின் முதல் குரலாக ஒலித்து தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை, ஆணித்தரமாக அவையில் எடுத்துரைத்து அன்றிலிருந்து இன்றுவரை ஏன் உலகுள்ளவரை எல்லோராலும் கண்ணியத்துக்குறிய காயிதேமில்லத் என்று அழைக்கப்படும் எளிமை ஏந்தல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர், நாடறிந்த நாவலர் அல்ஹாஜ், எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் [ரஹ்] அவர்களின் 125வது பிறந்த நாள் இம்மையின் கண்ணியம் போல, மறுமையிலும் புண்ணியம் பூத்துக் குலுங்கும் கண்ணியமான சுவன வாழ்விற்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்,.
தமிழ் மாநில தேசிய லீக்.

01/05/2020

உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

கொடிய கொரானா நோயின் தாக்கத்தால் இந்த சிறப்பு மிக்க தினத்தை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாட முடியாமல் உள்ளது.

என்றாலும் சங்கைமிக்க புனித ரமலான் மாதத்தில் இந்த சிறப்பு மிக்க தினம் வந்துள்ளதால் ஊதியமின்றி வாடும் கடும் உழைப்பாளி மக்களுக்கும்,வாய் திறந்து கேட்பதற்கு நாணி இருக்கும் உழைப்பாளிகளுக்கும் அள்ளி கொடுத்து இத்தினத்தை பெருமைப்படுத்துவோம்.
இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.

07/03/2020

வெற்றிகரமாக Yes Bank எனும் அடுத்த விக்கெட்டை வீழ்த்தி பாஜக அரசு 'நியூ சுடுகாட்டை' நோக்கி ஒரு சுற்று முன்னேறியிருக்கிறது. விக்கெட்டோடு சேர்த்து, தாங்கள் சேர்த்து வைத்த மொத்தத்தையும் இழந்தவர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

டீமானடைசேஷனின் போது நடந்ததைப் போலவே, பணக்காரனுக்கெல்லாம் செய்தி முன்னரே சொல்லப்பட்டு எல்லாப் பயலும் தப்பித்துவிட்டார்கள். மாட்டியதெல்லாம் நடுத்தரவர்க்கம்தான். இதில் திருப்பதி வெங்கடாசலபதி எனும் ஒரு பெரும் பணக்காரரும் தப்பித்திருக்கிறார். திருப்பதி தேவஸ்தானத்தின் 1300 கோடி ரூபாயை திடீரென சில நாட்களுக்கு முன்பு Yes Bankல் இருந்து எடுத்திருக்கிறார்கள். நியாயமாக ஒரு சொரணை உள்ள நாடென்றால் இந்தச் செயலைப் பார்த்து சந்தேகம் வரும். ஆனால் அர்னாபுகளாலும் பாண்டேக்களாலும் நிறைந்த நம் ஊடகங்கள் திருப்பதி பெருமாளின் அருளை வியக்கின்றன. அதாவது அவர் பணத்தை அவர் காப்பாற்றிக் கொண்டாராம். இதுதான் அருளாம்!

அடப்பாவிகளா... நாளை ஒருநாள் தண்ணி லாரி வராது எனத் தெரிந்தால், பக்கத்து வீட்டுப் பாட்டி கூட, தான் பார்க்கும் எல்லோரிடமும் அந்த விஷயத்தைச் சொல்லி இன்றே தண்ணி பிடித்துவைத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் திருப்பதி வெங்கடாசலம் அவர் பணத்தை மட்டும் காப்பாற்றிக்கொண்டாராம். இது பெருமையாம். அருளாம். உலகில் எந்த ஒரு கடவுள் மறுப்பாளனும் கூட கடவுள் எனும் கான்சப்டை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க மாட்டான்.

வருடாவருடம் திருப்பதி மலைக்கு வந்து மொட்டை போட்டுவிட்டு தங்கமும், வைரமும் வாரி இறைக்கும் தன் பக்தர்களின் கனவில் தோன்றியாவது, "மோடி அடுத்த மொட்டைக்கு கத்திய தீட்டிட்டாருடா.. தப்பிச்சுக்கங்கடா..." எனச் சொல்லி இருக்கலாம். அதைக் கூட செய்யாமல் கமுக்கமாக இருந்திருக்கிறார். இதில் பெருமை வேறு!

டீமானடைசேஷன் என்ற பெயரில் எவனும் வீட்டில் ரூபாயாக வைத்துக்கொள்ளக் கூடாது, அனைத்தையும் வங்கியில் போடுங்கள் என கழுத்தில் கத்திவைத்து மிரட்டியதும் இதே அரசுதான். இன்று வங்கிகள் ஒவ்வொன்றாக திவால் ஆக, ஆக வேடிக்கை பார்ப்பதும் இந்த அரசுதான். பற்றாக்குறைக்கு இந்த அரசு ரிசர்வ் பேங்கின் இருப்பையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் எவ்வளவு பெரிய பொருளாதார மோசடி, அயோக்கியத்தனம், முட்டாள்த்தனம். இதையெல்லாம் பிரதான செய்தி ஆக்காமல், ஆட்சி நடத்த வக்கில்லாத மத பயங்கரவாதிகளை குற்றவாளிகள் ஆக்காமல், திருப்பதி தேவஸ்தானத்தின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அதை பரப்ப இன்னொரு கூட்டம்.

இந்தியா ஆன்மீக நாடு என்பார்கள். அது ஒருகாலத்தில் உண்மைதான். மதவாதம் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா ஆன்மீக நாடாகத்தான் இருந்திருக்கும். இன்றோ மதவாத மடையர்களின நாடாக, ஆன்மீக அயோக்கியர்களின் நாடாக மாறி பரிதவிக்கிறது. "ஹேட்ஸ் ஆஃப் மோடிஜி. நியூ இண்டியா இஸ் பார்ன்," என டிவீட் போட்டவன் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறான். சாவதென்னவோ மிடில் கிளாஸ்தான்.

-டான் அசோக்
மார்ச் 6, 2020

31/12/2019

மஹராஷ்ட்ரா
2004 க்குப்பிறகு
முதன் முறையாக 4 முஸ்லீம் அமைச்சர்கள் NCP 2 CONG 1 SENA 1

OPS மகன் ரவீந்தரநாத் போன்று ராமதாஸ் மகன் அன்புமணி போன்று அடிமை இரத்தம் ஓடும் அரசியல் வாரிசு கிடையாது நான்@ உதயநிதி ஸ்டால...
14/12/2019

OPS மகன் ரவீந்தரநாத் போன்று ராமதாஸ் மகன் அன்புமணி போன்று அடிமை இரத்தம் ஓடும் அரசியல் வாரிசு கிடையாது நான்
@ உதயநிதி ஸ்டாலின்

23/08/2019

#சிவசங்கர் S S
சுதந்திரத்திற்கு முன்பே இந்தி எதிர்ப்பு குரல் தமிழகத்தில் இருந்து எழுந்தது. அது 1939 ஆம் ஆண்டு. அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி தான் இந்தியை திணித்தார். அப்போது மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். போராடியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டோருக்கு ஏழரை மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த நடராசன் என்பவருக்கு உடல் நலம் குன்றியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் விடுதலை என்றது அரசாங்கம். ஆனால், நடராசன் மன்னிப்புக் கோர தயாராய் இல்லை. அவர் மன்னிப்பு கேட்டு வெளிவர விரும்பவில்லை. ஆனால் நோய் கொடுமை அதிகமாகியது. நடராசன் மருத்துவமனையிலேயே தண்டனைக் கைதியாக இறந்து போனார்.

அப்போது நடராசன் நினைத்திருக்க மாட்டார், பின்னர் ஒரு காலத்தில் தி.மு.க தமிழகத்தில் அரசை அமைக்கும், முதல்வராக கலைஞர் வருவார், அவர் ஒரு பல்லடுக்கு அரசு மாளிகையை கட்டுவார், அதற்கு தன் பெயரை வைப்பார் என்று. தியாகிகள் தாளமுத்து, நடராசன் பெயர்களைத் தாங்கி, சென்னை எழும்பூரில் அரசுக் கட்டிடம் உயர்ந்து நிற்கிறது.

இந்தியை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதி இல்லாமலே, தம் மொழி உரிமைக்காக போராடியவர்கள் தமிழர்கள். சுதந்திரம் கிடைத்த பின்னரும், இந்தி மீண்டும் திணிக்கப்பட்டது. தமிழகம் கொந்தளித்து எழுந்தது. அப்போது, மத்திய அரசு இந்தி பேசும் மாநிலத் தலைவர்கள் கைகளில் சிக்கி இருந்தது. போராட்டம் தொடர்ந்தது. இந்தி பேசாத மாநிலங்கள் பல உண்டு. ஆனால் தமிழகம் மட்டும் தான் இந்தி திணிப்பை எதிர்த்து கடைசி வரை திடமாக நின்றது.

ஒரு கட்டத்தில், மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் திரண்டனர். மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால், பேரறிஞர் அண்ணாவே ஒரு கட்டத்தில் போராட்டத்தில் மாணவர்கள் பங்களிப்பை குறைக்க சொன்னார். அப்போது தி.மு.க தான் போராட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருந்தது. ஆயினும் மாணவர்கள் களம் கண்டனர். அரசு உச்சக்கட்ட அடக்குமுறையை கையாண்டது. மக்கள் காங்கிரஸை ஒதுக்கித் தள்ளினர்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. இடையில் இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ளும் வரை, ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடரும் என்ற உறுதிமொழி தான் அது. அது கூட தற்காலிகமானது தான் என்று இன்றும் விளக்கம் கொடுப்போர் உண்டு. "ஆனால்", இன்று வரை தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியவில்லை, பல முயற்சிகள் எடுத்தாலும்.

அன்று நடராசன்களும், தாளமுத்துகளும் துணிச்சலாக களம் இறங்கி இருக்காவிட்டால், இன்று தமிழகமும் இந்தி திணிக்கப்பட்ட மாநிலமாக தான் இருக்கும். அப்படி இந்தி திணிக்கப்படாததால் தான் டிஸ்கவரி சேனலும், 'ஜீ' சேனலும் தமிழில் சேவையை வழங்கி வருகிறார்கள். இல்லை என்றால் மகாராஷ்டிரா, குஜராத் போல தாய்மொழி மறக்கடிக்கப்பட்ட மாநிலமாக ஆகியிருப்போம். தனித்துவங்களை இழந்திருப்போம். இன்று தமிழ் மொழி, தமிழ் பண்பாடு காக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு விரிவாக இதை சொல்லக் காரணம், தமிழகம் தனித்து நின்று போராடினாலும் நியாயமாகத் தான் போராடுகிறது என்பது இப்போது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

அதற்கான சான்று, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் தற்போதைய நிலைப்பாடு. தமிழகம் இந்தி திணிப்பிற்கு எதிராக எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய போராட்டத்தைத் தான் இவர்கள் இப்போது துவங்கி இருக்கிறார்கள். தாய்மொழி கல்வி கட்டாயம் என சட்டம் கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி எழுத்துக்கள் அழிக்கப்படுகின்றன. போராடத் துவங்கி உள்ளனர்.

இதே நிலைப்பாடு தான், இன்று கஷ்மீர் பிரச்சினையிலும். தமிழகம் மாத்திரம் தனித்து நின்று கஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுக்கிறது. தி.மு.க தலைமையிலான எதிர்கட்சிகள் போராடுகின்றன. இதை பா.ஜ.கவினர் கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இது கஷ்மீர் மாநிலத்திற்கான பிரச்சினை மாத்திரம் இல்லை. மாநிலங்களின் உரிமை குறித்த பிரச்சினை. சுயாட்சி உரிமை பறிக்கப்படும் பிரச்சினை. நாளை இது மற்ற மாநிலங்களுக்கும் நடக்கலாம். எனவே இப்போதே இதை எதிர்த்து போராடுவது மாநிலக் கட்சிகளின் கடமை.

அதை உணர்ந்து தான், தி.மு.க தலைவர் தளபதி அவர்கள் கஷ்மீர் பிரச்சினையை முன்னெடுத்துள்ளார்.

# இந்த ஒற்றைக் குரல் தான் உரிமைகளுக்கான குரல், ஓங்கி ஒலிக்கும் !

23/08/2019

பாஜக சிதைத்த சிதைத்துக் கொண்டிருக்கும் துறைகளை பற்றிய ஓர் சிறு அணிவகுப்பு..!

பக்தாஸ் முக்கியமா படிக்கவும்!

#கட்டுமானத்துறை ;-

ரியல் எஸ்டேட், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை புதிய Project களை எடுப்பதை நிறுத்தி 1 1/2 வருடத்திற்கு மேல் ஆகிறது!
தென் இந்தியாவின் Apartments விற்பனை முன்னோடிகளில் பலர் அடுத்த திட்டங்களை தொடங்கப் போவதில்லை எனக் கூறி Engineer -களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்!

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த A.M.Naiyak (L & T -ன் தலைவர்) வெளியில் வந்து கட்டுமானத்துறை சரிவை சந்தித்து உள்ளது…, அரசு அறிவித்த Make In India திட்டம் எந்த வகையிலும் உதவவில்லை என்கிறார்!

ஒரு Hardcore பாஜக சொம்பாகவே இருந்தாலும் L & T எப்படியான நிறுவனம், A.M.நாயக் பேசும் வார்த்தைகளின் மதிப்பு என்ன என்பதெல்லாம் நன்றாகவே உறைக்கும்!

#வாகனம் ;-

Tata Motors
Hero Motor corps
TVS
Lay off க்கு நாள் பார்த்துக் கொண்டு உள்ளனர்!
சென்ற வாரத்தில் தான் தொடர் விடுமுறை அறிவித்தார்கள் என நினைத்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என பார்த்தால்……,
9 மாதங்களாக இதே நிலமை தான், எப்போது சம்பளம் இல்லாத விடுமுறை விடலாம் என நாள் பார்த்துக் கொண்டிருந்தோம் என வெடி வைக்கிறார்கள்!

Hyundai,
Maruthi
Mahindra & Mahindra
Toyota Kirlosker

என பல நிறுவனங்களும் தங்களின் சம்பளம் இல்லாத விடுமுறை நாளை சென்ற வாரம் அறிவித்தனர்!
இது எல்லாமே பல மாதங்களாக இருந்த Pressure- ன் வெளிப்படு தான், யார் முதலில் கையை தூக்குவது என்று Reputation Issue தான் இத்தனை நாள் வெளியே தெரியாமல் தாக்குப்பிடிக்க காரணம்.., நாட்கள் ஆக.., ஆக இது இன்னும் அதிகரிக்கும் என்பதே இத்துறை வல்லுநர்களின் கூற்று!

& :-

5 ரூபாய் /_ செலவு செய்து மக்கள் பிஸ்கட் வாங்க தயங்குகிறார்கள் என.., Britannia நிறுவன M.D வருண் பெர்ரி அதிர வைக்கிறார்.,

10 - 11% இருந்த எங்களின்
சராசரி கால் ஆண்டு வளர்ச்சி இப்போது 6% ஆக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது!

இன்னொரு பக்கம்.., Parle நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கும் பட்டியலை தாயார் செய்து அறிவித்தே விட்டது!

GST வந்த பிறகு ஒட்டு மொத்த தொழிலும் நசிந்து விட்டதாக கொதிக்கிறார்கள்!
12 % இருந்த வரியை GST என்ற பெயரில் 18% ஆக உயர்த்தி விட்டனர்!

இதை முற்றிலுமாக குறைக்க சொல்லவில்லை, 100 கிலோ வுக்கு குறைவான Biscuits பெட்டிகளுக்கு GST போடாதீர்கள்..,
இதனால் கிராமங்கள் வரை சிறு சிறு கடைகளில் குறைந்த அளவில் வாங்கி சில்லரை விற்பனை செய்தவர்கள் கூட வாங்க தயங்குகிறார்கள் இது அவர்களின் லாபத்தில் இல்லாமல் முதலில் (Capital)-லேயே அரசு கை வைப்பதாக அமைகிறது!

எங்களின் கோரிக்கையை அப்போதே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம்!

இதற்கு மேல் இந்த வார இறுதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவிடில்.., வாரம் 100 பேர் என இந்தியாவின் ஒவ்வொரு Factory-யில் இருந்தும் ஆட்களை வெளியேற்றும் பணியை தொடர உள்ளோம்., என்கிறது PARLE ..!

:-

கழுதை தேஞ்சு கட்டறும்பு ஆன கதை என்பதற்கு சரியான கண் முன்னான உதாரணம் இந்திய ஜவுளித் துறையை கூறலாம்!

இரண்டு நாள் முன்பாக வடக்கத்தி மாநிலங்களின் Mills Association ஓர் தகவலை செய்தி தாள்களில் விளம்பரமாக வெளியிட்டு உள்ளது..!

அதில்

2018 -ல் நடந்த Export க்கும் 2019- ல் செய்யப் பட்டு வரும் Export க்கும் இடையே நடந்த வீழ்ச்சி விகிதாச்சாரம் 50.1%.
TV எல்லாம் அரசுக்கு சாமரம் வீசுவதிலும், பாக்கிஸ்த்தான்-யை குறை சொல்வதிலுமே கவனம் செலுத்துவதால் தான் செய்தி தாள்களில் தனியார் விளம்பர பகுதிகளில் இதை விளம்பரமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம் என்கிறார்கள்!

தமிழகத்தில் 2017 - 18 -ல் மட்டும் 1,20,000 (ஒரு லட்சத்தி இருபதாயிரம்) பேர் வேலை இழந்து உள்ளனர் என்றும்.., 2017-ம் ஆண்டில் 225 நூற்ப்பாலை-கள் (Spinning Mills) தமிழகம் முழுக்க மூடப் பட்டு உள்ளன!
அதே ஆண்டில் இந்தியா முழுக்க 605 ஆலைகள் மூடப்பட்டன..!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முடக்கியதே இதன் முக்கிய காரணம் என்கிறார் Open-end Spinning Mills Association (OSMA) -ன் தலவர் திரு.ஜெயபால் !

இன்றைய நிலையில் இந்தியா முழுக்க 3 கோடி பேருக்கு ஏற்கனவே செய்து கொண்டு இருந்த Textile துறையில் வேலை இன்றி வெளியேற்றப் பட்டு உள்ளனர்!

கடந்த 10 வருடங்களில் இப்படி ஓர் நிலை இதுவே முதல் முறை!

வைகோ 23 வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் பதவி ஏற்ற உடனேயே முதலில் பேசியது இதைத்தான்.., பங்களாதேஷ் இந்தியா-வின் வேலையை பிடுங்கி கொண்டு உள்ளது..,

GST - யால் நாடு முழுக்க Textile துறை நலிவடைந்து வீழும் நிலை உள்ளது.., அதை மீட்க வரி கொள்கையை மாற்றி அமையுங்கள் என்றார்!

அந்த கேள்விக்கு பதில் சொன்ன துறையின் அமைச்சர்
ஸ்மிரிதி ராணி.., அப்படி எந்த பிரச்சனையும் இல்லை, Textiles நல்லா தான் இருக்கு என ஆர்வம் இல்லாமலேயே பதில் கூறினார் !
இப்போதும் அதே பதில் தான் அவரிடம் வருகிறது!
இதெல்லாம் கடினமா படிச்சு உழைச்சு மேல வந்தால் அடுத்தவனோட துன்பம் புரியும்!
FAKE Certificate -யை காட்டி பெருக்கு பின்னாடி டிகிரி போடுறவங்களுக்கு புரியறதுக்கு வாய்ப்பில்லை தான்!

அடுத்து நீங்க பார்க்க போறது தான் முக்கியமான ஓர் துறை..,

#காயலான்கடை :-

சிரிக்காதீங்க, உண்மையிலேயே காயலான்கடை என்பது இந்தியா முழுக்க 250 நகரங்களில் கண்ணுக்கு தெரியாமல் இயங்கி வரும் மாபெரும் தொழில்..,!
நீங்கள் Steel, Lorry, Metal Foundry, லேத் இப்படி ஏதாவது ஒரு தொழிலில் ஒன்றி இருந்தால் Scrap Business -ன் தாக்கம் தெரியும்!
இந்த துறை நாடு முழுதும் ஒரு சுறு சுறுப்பாக இயங்குகிறது என்றால்..,
அனைத்து தொழில்களும் தங்கு தடை இன்றி இயங்குகிறது என்று பொருள்!

அடுப்பில் பூனை தூங்குகிறதா..?
பாத்திரத்தை உருட்டுகிறதா..,? என்பதில் இருக்கிறது ஓர் வீட்டின் வளமும் செல்வமும்.., இங்கேயும் அதே தான்!

கடந்த இரண்டு மாதங்களில் பெரும் அளவுக்கு Steel Waste வருகை குறைந்து விட்டதாக கோவை சிறு நிறுவன முதலாளிகள் தெரிவிக்கின்றனர்!

80% சிறு குறு நிறுவனங்கள் பெரும் நட்டத்தை நோக்கி நகர்வதாக..,
Institute of Indian Foundrymen - ன் கோவை தலைவர் திரு.எழில் தெரிவிக்கிறார்!

இது நேற்று(21-8-19) வரை வெளியில் தெரிந்தவை!

இன்னும் நிறைய வரும், என்ன செய்யப் போகிறீர்கள் வாருங்காலத்தை காக்க...., என்று சிந்திக்க வேண்டியது நீங்கள் தான்!



- எழுதியவர் பிறைக்கண்ணன்

Pirai Kannan

22/08/2019

வருடம் 2010

அன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

போலி என்கவுண்டர் கொலை வழக்கில் அமித்ஷா கைது..

வருடம் 2019

இன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா

இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய பாஜக துடிக்கிறது..

அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லவே இல்லை என நீங்க நினச்சா.., சம்பந்தம் இல்லை.., அப்படியும் இருக்குமோன்னு நினச்சா அப்படிதான் இருக்கும்.. காரணம், ஐஎன்எக்ஸ் வழக்கில் ஆஜராக சிதம்பரம் மறுக்கவே இல்லை, அவர் இப்போ எம்பியும் கூட.. கைது எல்லாம் தேவையே இல்லை, பத்து வருடம் நிதியமைச்சராக இருந்த ஒருவரை சிபிஐ கைது செய்ய நேற்று முதல் தேடி வருகிறதாம்..

நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கோங்க..

22/08/2019

ப.சிதம்பரம் கைதால் அமித்ஷாவும்மோடியும் நேர்மையான மனிதர்கள் என்று
அர்த்தம் இல்லை! வரும் காலத்தில் இவர்களையும் சிபிஐ தேடும்!

30/05/2019

ஒரு மார்வாடியின் குரல்.
-----------------------
நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துவம் காட்டிய தமிழக வாக்காளர்களே வணக்கம். இந்தியா முழுவதும் ஒரேமாதிரி நினைக்கையில் நீங்கள் மட்டும் தனி வழியில் சிந்தித்தது தமிழன் தனித்துவமானவன், தமிழ் இனம் தனி இனம், மற்றொரு இனம் எடுக்கும் முடிவை திராவிட இனம் எடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதை காட்டிவிட்டீர்.

நேற்றிலிருந்து புரியாத புதிராக இருந்ததை யோசித்து யோசித்து விடைதேட முற்பட்டு ஒரு நண்பனின் பேச்சில் சிறு பொரி கிட்டியது.

ஆம், தமிழகத்திற்கு பிழைப்புத்தேடி வந்த குஜராத் ராஜஸ்தான் மார்வாடிகளை, பட்டேல்களை, ஜெயின்களை, சௌராஷ்டிரர்களை, சிந்திகளை பெரும் செல்வந்தர்களாக்கியது இந்தமண். நாங்கள் மட்டுமா ஆந்திராவிலிருந்தும் கேரளாவிலிருந்தும் வந்தவர்களை திராவிடத்தின் ஒருதாய் பிள்ளையாக அன்புடன் அரவணைத்துக்கொண்டவர்கள் நீங்கள். இன்றும் பீகாரிலிருந்து உபியிலிருந்து ராஜஸ்தானிலிருந்து மேற்குவங்கத்திலிருந்து தினம் வந்திறங்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கும் மக்கள் நீங்கள். உங்களின் திராவிடக்குடும்பத்தின் அங்கமான ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களை வாழவைக்கும் இனம் திராவிட இனம் என்பது நிதர்சனம்.

நான் அதிசயத்துப்போகிறேன் இந்தமண்ணைப்பார்த்தும் மக்களைப்பார்த்தும், யார் இந்தமண்ணை, மக்களை பண்படுத்தியது என்று!!!

மிகவும் வெளிப்படையாக சொல்கிறேன் நாங்கள் இங்கே வந்து வாழ்வதைப்போல் ஒருநாளும் எங்கள் மண்ணில் இவ்வளவு சுதந்திரமாக சௌகரியமாக வாழ்ந்துவிட முடியாது. தென்னகம் வந்து கெட்டவர்கள் யாருமில்லை.

எங்கள் மண்ணில் டாடா,பிர்லா,அம்பானி, அதானிகள் தான் உருவாயினர். எங்களைப்போன்றவர்களையும் தொழிலதிபர்கள் ஆக்கியது இந்த திராவிட மண்.

நாட்டில் இங்கு மட்டும் தான் எல்லா ஜாதியிலும் என்ஜினியர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என நீக்கமற நிறைந்துள்ளனர். நீங்கள் வேறு இடம்பெயர்ந்ததெல்லாம் அறிவுசார்ந்த சமுதாயமாக பல்துறை நிபுணர்களாக சென்றீர்கள். இன்று உலகில் எந்த மூலையிலும் தமிழகத்தில் எந்த ஜாதியைச்சேர்ந்தவரும் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவனாக இருக்கிறான். எங்கள் மண்ணில் இப்படி சமத்துவம் இல்லையே.. எங்களைப்போல் நீங்கள் கூப்பிடாமல் பிழைக்க சென்றவர்கள்கள் அல்ல, உங்கள் அறிவுசார் தேவை இருப்பதால் ஒரு "டிமாண்டின்" அடிப்படையில் சென்றவர்கள்.

இதையெல்லாம் எது உங்களுக்கு பெற்றுக்கொடுத்தது? ஆம், சமூகநீதி அடிப்படையில் நீங்கள் போராடி பெற்ற இட ஒதுக்கீட்டால், இதனால் பயன்பெறாத ஜாதி ஏதாவதும் உண்டா? இந்தமண்ணை பதப்படுத்த ஓடி ஓடி பணியாற்றிய நீதிக்கட்சி தலைவர்களின் வரலாற்றையும் காமராஜரின் தீர்கத்தையும் எண்ணிப்பார்க்கிறேன். உங்கள் ஊணில் உதிரத்தில் சுயமரியாதை நெருப்பை ஏற்றிய ஈரோட்டு கிழவனை நினைக்கிறோம். ஒரு பண்படுத்திய மண்ணாக இல்லாமல் போயிருந்தால் எங்களைப்போன்ற காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால் நாங்கள் எங்கு போய் பிழைத்து இந்த உயரத்தை தொட்டிருக்க முடியும். எங்கள் மண்ணில் ஒரு "பெரியார்" தோன்றியிருந்தால் தினம் தினம் இரயிலில் ஆயிரக்கணக்கான பேர் பிழைப்பு தேடி இங்கு வரவேண்டியது இல்லையே. சட்டம் ஒழுங்கு மட்டும் சரியில்லை என்றால் இங்கு கால் வைக்கமுடியுமா?

திராவிடர்களே-தமிழர்களே உங்களை வணங்குகிறேன். நீங்கள் சுயமரியாதைக்காரர்கள். இணக்கமாக இருக்க என்ன அடிமைகளா? உரிமையைப் பெற எதற்கு ஆளுங்கட்சியாக இருக்கவேண்டும். இந்த தேர்தலில் நாடுமுழுவதும் 37 சதவீதமான வாக்குகளை பெற்றுள்ளது. மீதி 63 சதவீதமான மக்களின் குரலாக "திராவிடர்"களின் குரல் அங்கே ஒலிக்கட்டும்.

இங்கு நீங்கள் பெற்றது இணக்கமாக இருந்தல்ல போராட்டங்கள் மூலமே என்பதே வரலாறு.

உங்கள் தீர்ப்பை பரிகாசிக்கவில்லை, எங்களுக்கு சோறுபோடும் எஜமானர்கள் நீங்கள். உங்கள் தீர்ப்பே எங்களின் தீர்ப்பு.

இந்த மண்ணுக்கும் "திராவிட இனத்திற்கும்" என்றும் நன்றியுள்ளவர்களாக எங்கள் சந்ததியினரை வளர்த்தெடுக்க வேண்டும்.

அன்புடன்.....
பிழைக்க வந்த மார்வாடி.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMDL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share