02/05/2026
# # **ஆரோக்கியமே ஆகச்சிறந்த லாபம்!** 🏥✨
“மருத்துவக் காப்பீடு எடுத்தோம்… ஆனால் இந்த வருடம் பயன்படுத்தவே இல்லையே, பணம் வீணாயிற்றே!” — இப்படிச் சிந்திப்பது நம்மில் பலருக்கு இயல்புதான்.
ஆனால் ஒரு நிமிடம் நின்று யோசித்துப் பாருங்கள்… அந்த பாலிசி பயன்படுத்தப்படவில்லை என்றால், அது ஒரு நஷ்டம் இல்லை — அது நீங்கள் அந்த ஆண்டு முழுவதும் ** #ஆரோக்கியமாக_இருந்தீர்கள்** என்பதற்கான சான்று. அதற்கும் மேலான லாபம் வேறெதுவும் இருக்க முடியுமா?
# # # **மருத்துவமனையின் வலி அறிவீர்களா?**
ஒருமுறை மருத்துவமனையின் அவசரப் சிகிச்சைப் பிரிவின் முன்னால் நின்று பாருங்கள்... அங்கு கண்ணீரோடு கலங்கி நிற்கும் குடும்பங்களையும், பணத்திற்காகத் தவிக்கும் முகங்களையும் பார்த்தால் புரியும் — **"நாம் கட்டிய பணம் கிளைம் ஆகாமல் இருப்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம்"** என்று!
பணம் போனாலும் பரவாயில்லை, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நாம் கட்டிய அந்தப் பிரீமியம், ஒரு மூலையில் யாரோ ஒருவரின் அவசர நேரத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அது நமக்குத் தெரியாத ஒரு மறைமுகத் தானம். 🎁
*பாதுகாப்பு என்னும் உற்ற நண்பன்**
நாம் நம்முடைய குடும்பத்திற்காக எடுத்த இந்தச் சிறிய பாதுகாப்பு, ஒரு பெரிய சமூக நலனாக மாறுகிறது. “சுயநலத்திற்குள்ளும் பொதுநலம் உள்ளது” என்பதற்கே இது ஒரு சிறந்த உதாரணம்.
மருத்துவக் காப்பீடு என்பது வெறும் காகிதம் அல்ல… அது வாழ்க்கையின் கடினமான தருணங்களில் நம்மைப் பிடித்து நிறுத்தும் ஒரு உறுதியான உற்ற நண்பன்!*🤝
#மருத்துவக்_காப்பீடு_செய்வோம்_கவலையற்ற_வாழ்வை_உறுதி_செய்வோம்!