Sri VVF

Sri VVF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri VVF, Financial service, No. 19 Arudhra building, Anandha nagar, Ambur.

17/09/2024

ரிசபம் ,துலாம்,கடகம் ராசிக்காரரை பார்த்து உழைச்சு கஷ்டப்பட்டு முன்னேறும் வழியை பார் என சொல்ல முடியுமா..?

அவர்களே ஆயிரம் பேருக்கு வழி காட்டுவாங்க அவங்க சிரிச்சாலே பணம் வரும்.அவர்கள் பேசினாலே எல்லோரும் வசியம் ஆவார்கள் அவர்கள் முகம் பார்த்தாலே யாருக்கும் உற்சாகம் வரும்.காரணம் அவர்களது ராசி அதிபதி சுக்கிரன்.சுகத்துக்கு அதிபதி ,ரசனையின் மொத்த குத்தகைதாரர் ராசியில் பிறந்தவருக்கு அதிர்ஷ்ட தேவதை பின்னாடியே வராதா..?

இப்படி சொல்றீங்க ஆனா நான் தான் வாழ்வா சாவான்னு போராடுகிறேன் என சொல்கிறீர்கள் என்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்,சனி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என அர்த்தம்.ஆனால் பெரும்பாலான இந்த ராசியினர் சுகமாக இருக்கிறார்கள் .சின்ன பிரச்சினையை பெரிதாக பார்க்காதீர்கள் பொதுவான உங்கள் வாழ்க்கை தரத்தை பாருங்கள்

கொஞ்ச நாள் வாழ்க்கை சந்தோசமாக இருப்போம் நல்லா சாப்பிட்டு, நட்பு உறவுகளோடு ஊர் சுற்றுவோம் பணம் சம்பாதிப்பது ஈசி...அதை அப்புறம் பார்த்துக்கலாம் ...இல்லைன்னா ஜாலியா சம்பாதிப்போம்..இது துலாம்

கொஞ்ச நாள் வாழ்க்கை ...எவ்வளவு முடியுமோ சம்பாதிப்போம் சேர்த்து வைப்போம்..இது ரிசபம்

முயற்சி செய்து தோல்வி முயற்சி செய்து தோல்வி சறுக்கல் நிறைய அனுபவங்கள் பிறகு அந்த அனுபவங்களை வைத்து விஸ்வரூப வெற்றி - கடகம்

#ராசிபலன் #ஜோதிடம்

17/09/2024

விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்க உள்ளது மத்திய அரசு ........

1980 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது இந்திய அரசு......

கடைசியாக 2010 ம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2011 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.......

2020 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணங்களால் நிறுத்தப்பட்டது.........

பல்வேறு கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன......

தற்போது இந்தியாவில் 140 கோடி மக்கள் வசிக்கின்றனர்......

அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா..........

2024 ல் தோராயமாக

உ.பி - 20 கோடி
மகாராஷ்டிரா - 12 கோடி
பீகார் - 11 கோடி
மேற்கு வங்காளம் -10 கோடி
மத்திய பிரதேசம் - 8.50 கோடி
தமிழ்நாடு - 8 கோடி
ராஜஸ்தான் - 7 கோடி
கர்நாடகா - 6.75 கோடி
....
வியாபார சந்தையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.......

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பிறகு தமிழ்நாடுதான் மிகவும் சிறந்த சந்தை......

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே , நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், சோலாப்பூர், அகமத் நகர் உள்ளிட்ட பெரு நகரங்கள் உள்ளன........

மகாராஷ்டிரா க்கு Equal ஆக
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பெருநகரங்களும் உள்ளன.......

2024 தோராயமாக நகரம் மற்றும் புறநகரில் மக்கள் தொகை......

NCR - 3.50 கோடி
மும்பை - 2.70 கோடி
கொல்கத்தா - 1.70 கோடி
பெங்களூரு - 1.40 கோடி
சென்னை - 1.,30 கோடி
ஹைதராபாத் - 1.05 கோடி
அகமதாபாத்- 90 லட்சம்
புனே - 85 லட்சம்
சூரத் - 80 லட்சம்

இதன் பிறகு மிகப்பெரிய Gap

கோழிக்கோடு - 42 லட்சம்
ஜெய்ப்பூர் - 40 லட்சம்
கான்பூர் - 38 லட்சம்
லக்னோ - 37 லட்சம்
நாக்பூர் - 36 லட்சம்
இந்தூர் - 36 லட்சம்
கோயம்புத்தூர் - 34 லட்சம்
கொச்சின் - 32 லட்சம்
திருச்சூர் - 28 லட்சம்
மலப்புரம் - 26 லட்சம்
போபால் - 25 லட்சம்
வடோதரா - 24 லட்சம்
பாட்னா - 22 லட்சம்
விசாகப்பட்டினம் - 21 லட்சம்
திருப்பூர் - 20 லட்சம்
மதுரை - 18 லட்சம்
ராஜ்கோட் - 17 லட்சம்
திருச்சி - 16 லட்சம்
சேலம் - 15 லட்சம்.....

தமிழகத்தில் மிகவும் நல்ல வியாபாரம் தளங்கள்:
சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு,திருநெல்வேலி, திருப்பூர், வேலூர்,நாகர்கோவில், , கரூர், கும்பகோணம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாமக்கல், திருவண்ணாமலை

இந்த மாநகராட்சிகளை தவிர

ஒரு சில நகராட்சிகளும் நல்ல வியாபார தளங்களாக உள்ளது.....

பொள்ளாச்சி
கள்ளக்குறிச்சி
பண்ருட்டி
மயிலாடுதுறை
கோவில்பட்டி
திருவில்லிபுத்தூர்
தென்காசி
இராசபாளையம்
மார்த்தாண்டம்
ஆரணி
திருப்பத்தூர்
சத்தியமங்கலம்
கோபி
திருச்செங்கோடு
மேட்டுப்பாளையம்
உடுமலை
தேனி
விருத்தாசலம்
தருமபுரி
திருத்தணி

உள்ளிட்ட நகராட்சிகளும் நல்ல வியாபார தளங்கள்.......

14/09/2024

உண்டியலில் பணம் சேமித்து அதை பலரும் பெட் ரூம்ல வெச்சிருப்பாங்க அல்லது படிக்கும் அறையில் வெச்சிருப்பாங்க...உண்டியல் வைக்கும் இடம் பூஜை அறை...சில பணக்காரர்கள் பூஜை அறையில் ரகசிய லாக்கர் வெச்சிருப்பாங்க அதில் நகை பணம் இருக்கும் தினமும் பூஜை செய்வது சாமிக்கும் ஆச்சு அந்த நகை பணத்துக்கும் ஆச்சு .பணத்தை மதிச்சு அதை வழிபட்டால்தானே பணம் பெருகும் ?

சிலர் பேண்ட் பின் பாக்கெட்டில் மணி பர்ஸ் வெச்சு பணம் எடுக்க வைக்கன்னு இருப்பாங்க...யோசிச்சு பாருங்க..அது மரியாதையா...இதயம் இருக்கும் இடத்தில் சட்டை பாக்கெட் வெச்சு அதில் பணம் வைக்கும் பாரம்பரியம் நம்முடையது .

சமையல் அறையில் அம்மாக்கள் எல்லாம் அரிசி பக்கெட்டில் பணம் வெச்சிருப்பாங்க அஞ்சறைபெட்டியில் பணம் வெச்சிருப்பாங்க அது சுக்கிரன் வசிக்கும் இடம்...பூஜை அறை குருவின் இருப்பிடம் இங்கெல்லாம் பணம் பல மடங்கு பெருகும்

கொஞ்சம் பணத்தை அரிசி பக்கெட்டிலும் அஞ்சறை பெட்டியிலும் வெச்சு பெண்கள் புழங்குங்க காசு பணம் குறை இருக்காது

ஆண்கள் பூஜை அறையில் பணத்தை தினமும் வைத்து எடுங்க வருமானம் பெருகும்

#பணம் #முதலீடு #சேமிப்பு

12/09/2024

உங்கள் குழந்தை மகரம்,கும்பம்,மீனம்,கடகம் ராசியா..? அவர்கள் டீன் ஏஜ் வயதில் இருக்கிறார்களா..?

அதிக கண்காணிப்பு இப்போதுதான் தேவை.அவர்களது செல்போன் உரையாடல்கள் ,சோசியல் மீடியா விவகாரங்கள் ,நண்பர்கள் சேர்க்கையை கவனியுங்கள்

ஏழரை சனி நடக்கும்போது பருவ வயதில் இருக்கும் ஆண்கள் பெண்கள் வாழ்வில் நிறைய மாற்றம் உண்டாகும்.காதல் உண்டாக்குவதும் குடிப்பழக்கம் உண்டாவதும் போதை பொருள் உட்கொள்வதும் சனி தான் ஆரம்பித்து வைக்கிறார்...

சோம்பல்,சலிப்பு,அலட்சியம் சனியின் நண்பர்கள்...சோம்பேறியாக இருப்பவர் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறார்.படிப்பில் நாட்டமின்மை எதிர்காலம் பற்றி கவலையே இல்லாமல் இன்னிக்கு என்ன குழம்பும்மான்னு சாப்பாட்டில் அதிக அக்கறை காட்டுவது,கெட்ட நண்பர்களின் சேர்க்கையை சனி வலிய கொண்டு வந்து சேர்ப்பார் ...

பாய் ப்ரெண்ட் ,கேர்ள் ப்ரெண்ட் எல்லாம் கோர்த்து விட்டு பைத்தியமாக்குவது ஏழரை சனி அஷ்டம சனியில்தான்...கடகம் ராசியில் இருக்கும் உங்கள் பையன் அல்லது பெண்ணை இக்கால கட்டத்தில் அதிகம் கண்காணிப்பது அவசியம்..

ஏழரை சனி அஷ்டம சனி நடக்கும் காலத்தில் அதிக மனக்கட்டுப்பாடு தேவை அடுத்தவன் செய்த தப்புக்கு நம்மையும் போலீஸ் ஸ்டேசன் கொண்டு போய் நிற்க வைக்கும்.

#கடகம் #மீனம் #ராசிபலன் #ஜோதிடம் #மகரம் #கும்பம்

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் எ...
09/09/2024

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.
மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........

ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......

“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார்.

அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை நண்பர்களே..

Head office ambur
08/09/2024

Head office ambur

Pa mr. Anburaj
08/09/2024

Pa mr. Anburaj

Denikottai branch
08/09/2024

Denikottai branch

Address

No. 19 Arudhra Building, Anandha Nagar
Ambur
635802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri VVF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share