13/09/2018
உங்களுக்கு ஒரு free advice இன்னைக்கு தரபோறேன் , உபயோகமா தருவேன்னு நெனச்சா தொடருங்க , இல்ல skip பண்ணிருங்க..ஏன்னா , நான் மெனக்கிட்டு படித்த பல புத்தகங்களின் முக்கியமான வடிகட்டின extract இது..
உங்களுக்கு அத்தியாவசியமானதுதான் இது.. அதாவது ஏன் பணக்காரன் பணக்காரனா இருக்கிறான் , ஏழை ஏழையாவே இருக்கிறான்.. பணக்காரனின் சூத்திரம்தான் என்ன? என்பதைத்தான் சுருக்கமாக அலச இருக்கிறோம்.
சரி , இதுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவ்வளவு பெரிய, காஸ்ட்லியான ஃபெராரி கார் சம்பந்தமான விளம்பரங்கள் எங்கயாது பாத்துருக்கீங்களா? இல்ல அல்லவா ? சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கு.. அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் நுண்ணிய தொடர்பு இருக்கு..
சரி மேட்டருக்கு வருவோம் , crisp ஆ பணக்காரன் ஐந்து வாழ்க்கை தாரக மந்திரத்தில் இருந்து வழுவுவதே இல்லை , இந்த ஐந்து விஷயங்களை மெனக்கிட்டு follow பண்ணுங்க ..வாழ்க்கை தரத்துக்கு மேலே ,மேலே வருடா வருடம் உயர்வது சாத்தியப்படும்..
1. First asset than comfort; நடுத்தர மக்கள் 15 ஆயிரம் சம்பளம் வைத்திருப்பவன், மூனுமாச சம்பளத்துக்கு ஈடான மொபைல் போன் வைத்து இருக்கிறான்.. பணக்காரன் அவன் தேவைக்கு மேலே அத்தியாவசியத்துக்கு மேலே எந்த விஷயத்தையும் வாங்குவதில்லை ..நன்றாக கவனியுங்கள், அப்படி வாங்கினால் ஒன்று அவனுடைய asset க்கான investment பண்ணிய பிறகோ அல்லது அவனுடைய income taxக்கு கணக்கு காமிப்பதற்காகவோ, அந்த செலவுகளை செய்து expense write off பண்ணுகிறான் ..
2.Pay yourself first.: உலகத்தின் பெரிய பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் Warren baffett என்ன சொல்கிறார் தெரியுமா ? உங்கள் வருமானத்தில் முதலில் குறைந்த பட்சம் 20% தனியே எடுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள் . மிச்ச பணமே உங்களுக்கான கடன், செலவு இத்தியாதி இத்தியாதி என..ஆனால் நாம் சேமிப்பை செலவுக்கு மிஞ்சி மட்டுமே கருதுகிறோம் , அதுதான் ஆகசிறந்த மிடில்க்ளாஸ் பிழை..மாற்றவேண்டிய அத்தியாவசிய செயல் இது ..
3. Out source: இதென்னடா பெரியவார்த்தை என்கிறீர்களா? சரியாகத்தான் சொல்லி இருக்கிறேன். அன்றாட சில உங்கள் routine வேலைகளை அவுட்சோர்ஸ் செய்து அந்த நேரத்தில் நீங்கள் additional பொருள் ஈட்டலில் உங்கள் நேரத்தை முதலீடு செய்யலாம்.. உதாரணமாக , நீங்கள் ஒரு கணக்காளரா? , ஓவியரா? , பாடகரா ?, உங்கள் அலுவல் தவிர்த்து மற்ற நேரத்தில் உங்கள் நேரத்தை முதலீட்டு செய்து பொருளீட்டலாம் . அதற்கு இடைஞ்சலாக இருக்கும் சில வீட்டு பணிகளை outsource ஓ அல்லது வேறு வகையிலோ ஈடு செய்யலாம் ..
4. Improve your skills: இது ஒரு முக்கிய தியரி .. நம்முடைய திறமைகளை அடிக்கடி பட்டை தீட்டுவது இன்றி , அடுத்த லெவலுக்கு உயர்த்தியும் கொள்ளவேண்டும் ..அதாவது , experience வேற expertise என்பது வேற ..உதாரணமாக , நீங்கள் கலைபொருள் தன்னிச்சையாக செய்பவர் எனில் , அதை இன்னும் mass scale ல் செய்து விற்பனை செய்கிற நிபுணத்துவத்தை வளர்த்து கொள்ளலாம், கூட சில பகுதி நேர பணியார்களை அமர்த்தி. ஏன்!! , அதுவே உங்கள் எதிர்காலமாகவும் ஆக கூடலாம் .
5. Play win win game: இது உங்கள் குணாதிசயம் சம்பத்த பட்டது .., I can't be good to every one , but i can be fair என்று Infosys நாராயணமூர்த்தி அடிக்கடி சொல்லும் மந்திரம் . அது கிட்டதட்ட இந்த rule க்கு பொருந்தும்..உங்களுக்கான இடத்தை பிடிக்க பிரயத்தனிக்கும் அதே நேரத்தில் ,அது மற்றவர்களுக்கான இடத்தை தட்டி பறிப்பதாக இருந்து விட கூடாது.. சரியான சமன்பாட்டை ஏற்படுத்துங்கள் , அது வாழ்க்கை பயணத்தில் ,நிறைய well wisher களை இணைக்க வல்லது.. அவர்களே உங்களுக்கான மறைமுக வருவாய் ( passive income) ஈட்டிதரும் மறைமுக எதிர்கால பார்ட்னர்கள் ..அதைதான் வின்-வின் situation என்பார்கள்..
இன்னும் பற்பல வாழ்க்கை சூத்திரங்கள் இன்னும் அடுக்கலாம் , ஆனால் அவை பெரும்பாலும் மேற்கூறியவையின் வேற்று வடிவமாகவே இருக்கும்..
சரி , அதென்ன ஃபெராரி மேட்டர் என்கிறீர்களா ? ஒரு மேட்டுகுடிமகனின் consumer behavior எனும் வாங்கும் பாங்கு பற்றிய உளவியல் என்ன சொல்கிறது தெரியுமா? அவன், அநாவசியமாக பொழுது போக்கு டிவி பார்ப்பதில்லை , தேவையில்லாத நியூஸ் படிப்பதில்லை ..அவன் தனக்கான செய்தி , விளையாட்டு , பொழுதுபோக்கை சரியாக கவனமாக திட்டமிடுகிறான் , அதில் எந்த கவனசிதறலும் இல்லை ..ஏதாவது பொருள் வாங்க வேண்டிய தருணத்தில், அத்தனை காரணிகளையும் அலசி ஆராய்ந்து தனக்கான பொருளை வாங்குகிறான் ..ஆக , ஃபெராரி knows it well .His customer can not be influenced , but inspired. Thus ,No Advt gimmick will work on him.
NB : நீங்கள் வாழ்க்கை மந்திரம் சார்ந்த கீழ் குறிப்பிட்ட எந்த புத்தகங்கள் வாங்கினாலும் , அது மேற்குறிப்பிட்ட சூத்திரங்களை, வெவ்வேறு பாணியில் அடக்கி இருக்கும்