15/07/2025
மீள் பதிவு ( may 2024 இல் இட்ட பதிவு.Hcl Technolgy content in that post.
(வாங்க வேண்டிய நேரம்... ) IT மொத்தமாக exit ஆகிருந்தேன். Recently started with Wipro , waiting for TCS (3000 area), இப்போ hcl. இங்க இருந்து இறங்கினால் hcl kae high priority ( முதன் முதலில் வேலை கொடுத்த புண்ணியவான்)
Alert....நீண்ட பதிவு....
........தேர்தல் vs சந்தை....
ஒவ்வொரு market யேற்றத்திலும் சிறிது profit Book செய்து வைத்துக்கொண்டால் market இறக்கம் காணும்போது புதிய stocks வாங்க அல்லது average செய்ய உதவியாக இருக்கும்.
குறிப்பாக technical இல் பெரிய அளவிற்கு knowledge இல்லாதவர்கள் இதை செய்வது முக்கியம்.
Market இறங்கி விடுமோ என பயமோ,இறங்கும்போது பயமோ வந்தால் நீங்கள் technical ஆகவும் தெளிவாக இல்லை அல்லது பண்டமெண்டல் ஆகவும் தெளிவாக இல்லை என அர்த்தம்.
Partial Profit Booking என்பது ஒரு அருமையான வழி,சந்தையில் ஜெயிப்பதற்கு , கண்ணில் தெரியும் profit களை சிறிதளவு book செய்வதில் தவறு ஏதும் இல்லை.
Market எங்கு சென்றாலும் ,பங்குகளை தேர்வு செய்வதில் உங்கள் பாணி என்ன என்பதில் தெளிவாக இருக்கக் வேண்டும்.
Technical அடிப்படையிலான entry எனில் stoploss வைக்க வேண்டும் அல்லது அடுத்த மேஜர் support என்ன average செய்ய எனத் தெரிந்திருக்க வேண்டும்.
Fundamental அடிப்படையிலான entry என்றால் நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கும் விலையே நல்ல விலை எனும்போது அதே பங்கு 80 ற்கு கிடைத்தால் சந்தோசமாக தான் வாங்க வேண்டும்.( அப்போ அந்த ஸ்டாக்கை 80 rs வந்த பிறகு வாங்கலாம் என்றால் அதை கணிக்க technical தேவை).
இந்த மேற்கண்ட இரண்டிலும் இம்முறையில் நீங்கள் stocks தேர்வு செய்தாலும் இருவருக்கும் பொதுவான ஒன்று money management and allocation.
Technical சார்ந்து முடிவு எடுப்பர்வர்க்கு stop loss வைக்கவும் அல்லது அடுத்த support இல் வாங்கவும் பணம் இருக்க வேண்டும்.
அது போலத் தான் Fundamental அடிப்படையில் வாங்குபவர் எனில் அவர்க்கும் average செய்ய பணம் வேண்டும்.
உதாரணத்திற்க்கு ,ஒரு நபர் 30000 ரூபாய்க்கு 93 ரூபாயில் trade ஆகி கொண்டிருக்கும் ஒரு பங்கை 90இல் வாங்கலாம் stoploss 87 அடுத்த Target அடுத்த Target 96 ரூபாய் அடுத்த support 80 ரூபாய் என வைத்துக் கொண்டால்
அவர் trader எனில்
முதலில் அப்பங்கு 90 வரும் வரை வாங்க மாட்டார், மேலும்
இந்த trade risk reward ratio 1:2 அதாவது 90 இல் 333 shares வாங்கிவிடுவார் stop loss அடித்தால் ஒரு பங்கிற்கு 3 rs ( 333*3= 999) நஸ்டம் ஏற்றுக் கொள்வார், target hit ஆனால் அதாவது 96 சென்றால் ஒரு பங்கிற்கு 6 ரூபாய் லாபம் ( 333*6=1998 rs) எடுத்துக் கொள்வார் இது இரண்டில் ஒரு முடிவு வரும் வரை காத்திருப்பார்.
அதே நபர் technical தெரிந்த Fundamental investor எனில் 90 இல் ஒரு பகுதியை வாங்கிவிட்டு ( 15000 ரூபாய்க்கு) அடுத்த பகுதியை 80 இல் வாங்க 30000 ரூபாயில் மீதி 15000 ஆயிரத்துடன் காத்திருப்பார். குறுகிய காலத்தில் விற்க மாட்டார்.நஸ்டமும் book செய்ய மாட்டார்.
இப்போது இதையே ஒரு Fundamental மட்டும் பார்த்து வாங்கும் investor அதே பங்கை 30000 ற்கு வாங்க முடிவு செய்தார் எனில் உதாரணத்திற்க்கு 93 ரூபாயில் இருக்கும் அப்பங்கின் book value 100 ரூபாய் மற்ற para metrs களும் நன்றாக உள்ளது எனில் அப்பங்கை technical பார்க்காமல் 93லேயே ஒரு பகுதியை வாங்கிவிடுவார் அடுத்தடுத்த corrections கலில் அடுத்த பகுதிகளை வாங்கி விடுவார். குறைந்தது 3 பகுதிகளாக பிரித்து வாங்குவார்.
ஆனால் அப்பங்கிற்கான aloted amount ஆன 30000 k*m வாங்கி முடித்த பின் மேலும் மேலும் பணத்தை அதில் இட மாட்டார்.
இதைத் தான் money management and risk management எனக் கூறுகிறேன்.
இங்கே ஒரு trade இற்கு 30000 பயன்படுத்தினால் குறைந்தது உங்கள் portfolio 3 லட்சமாவது இருக்க வேண்டும். உங்கள் மொத்த portfolio வில் ஒரு பங்கிற்கு அல்லது ஒரு trade இற்கு எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியம்.
Fundamental மற்றும் technical இரண்டிலும் அடிப்படை புரிதல் இருந்தால் கூட money management and risk management and proper diversification & allocation இருந்தால் வெற்றி பெற முடியும்.
குறைந்த பட்சம் 1 லட்சம் இல்லாமல் நேரடி சந்தைக்கு வர வேண்டாம்.
உங்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பணம் குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு technical skill நிறைய இருக்க வேண்டும்.இது technical அடிப்படையில் வரும் trade களுக்கு.
உங்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பணம் குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் காத்திருக்க ( time)வேண்டும் .
முடிவு, குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க அதீத technical knowledge மற்றும் அதிக risk வேண்டும்.
Medium ter இல் அதீத பணம் சம்பாதிக்க நிறைய பணம் ,சந்தை பற்றிய அடிப்படை புரிதல் அதிக நேரம் காத்திருக்க தயாராக இருக்கும் மன நிலை வேண்டும்.
எனவே இப்போதும் சந்தை இறங்குமா, ஏறுமா எனக் குழப்பிக் கொண்டிருந்தாள் நீங்கள் மேற்கண்ட எந்த வகையிலும் சேராமல் சந்தையில் சூதாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
என்னை பொறுத்தவரை தேர்தல் முடிவிற்கு பின்பே...அது election result வந்த வுடன் அல்லது us election, நமது budget இன் போது மட்டுமே சந்தை இறங்கும் என நம்புகிறேன்.
Mid & Small Cap மற்றும் Auto , energy, PSU, defence, railway, PSU BANKS, கலில் லாபம் book செய்கிறேன் புதிய entry களை தவிர்க்கிறேன் ( நான் technical அடிப்படையில் வாங்குவபவன் அல்ல இவை technical ஆக bullish ஆக கூட இருக்கலாம்.)
Large Cap ( except auto, power, PSU) , Private Banks, IT, chemicals,pharma இவற்றில் புதிய buy செய்கிறேன் சந்தை இறக்கம் பற்றிய கவலை இல்லாமல்) .
உதாரணத்திற்கு Large Cap IT bluechip
HCL TECHNOLOGIES -- இதன் தற்போதைய DIVIDEND YIELD 3.80% ஒரு BLUECHIP IT பங்கை வாங்க எனக்கு இந்த காரணம் போதும் ( TECHNICAL அடிப்படையில் கூற வில்லை நான் HERO MOTOR பங்கை 3000 ரூபாயில் வாங்கியதும் இதே போல தான்). Hdfc Bank,asian paint,hul, Iex,DCB Bank வாங்கி வருகிறேன்.
சந்தை ஏறும்போது GREED வரும்,இறங்கும் போது பயம் வரும்...
BEAR மார்கெட் இல் BULL ஆகவும், BULL MARKET இல் BEAR ஆகவும் இருப்பது TECHNICAL பெரிய அளவிற்கு தெரியாத நபர்களுக்கு நல்லது.
#பணம்செய்யவிரும்பு #பங்குச்சந்தை #தமிழ்பங்குச்சந்தை