08/10/2024
06.10.2024 அன்று கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மால் முப்பத்தி எட்டாவது பொதுக்குழுக் கூட்டம் முதல் மாடி அரங்கில் துணைத் தலைவர் ரபீக் சாதிக் தலைமையில் நடைபெற்றது. அப்துல் வாஹித் கிராத் ஓதினார். செயலாளர் முஹம்மது முகைதீன் தம்பி வாசித்த ஆண்டு அறிக்கையில் 38 ஆம் ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பைத்துல் மால் வட்டி இல்லா கடன் வழங்கல், ஜக்காத் சேகரித்து உரியவருக்கு வழங்குதல் நோயாளிகளுக்கு மாதந்திர உதவி, திருமண உதவி ஏழைகளுக்கு மாதாந்திர உதவி மாணவர்களுக்கு ஏழை கல்வி உதவித் தொகை, அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவுதல் மற்றும் அதன் குறிக்கோளின் படி ஆற்றும் சேவைகள் பற்றி விவரித்தார். பொருளாளர் டவுன் காஜி காதர் பக்ஸ் ஹூசைன் நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்கு தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தார். துணைச் செயலாளர் முஹம்மது நிஷார் நன்றியுரை கூற பொருளாளர் டவுன் காஜி காதர் பக்ஸ் ஹூசைன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.