30/03/2022
அன்பர்களின் கனிவான கவனத்திற்கு,
☘️☘️☘️☘️☘️
1.மகா கும்பாபிஷேகம் முடிந்த பின் அன்றே பக்தர்கள் மொட்டை எடுப்பது, காது குத்துவது மற்றும் பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்ய தொடங்கலாம். பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கு தனியாக புதிய சமையலறை கட்டப்பட்டுள்ளது..
2. 5/4/22 அன்று பக்தர்கள் தங்குவதற்கு மிதமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள குளியலறைகளை, கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. 5/4/22 அன்று இரவு வாணவேடிக்கைகள் தாயில்பட்டி,நாயகி ஃபயர் வொர்க்ஸாரின் கைங்கரியத்தில் நடக்க இருப்பதால் பக்தர்கள் வரும் கார்களை கண்ட இடத்தில் நிறுத்த இயலாது. கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வண்டிகளை நிறுத்த இயலும்.
4. தனியாக பேருந்து மற்றும் மினி வேன்கள் டெம்போ டிரக் அமர்த்தி வருகின்ற அன்பர்கள் தங்களது பேருந்துகளை /வண்டிகளை தாராபுரம்- பொள்ளாச்சி முக்கு ரோட்டில் இருந்து நமது கோவிலுக்கு வரும் வழியில் நமது கோவிலுக்கு சுமார் 200 மீட்டர் முன்பே இடது பக்கமும் வலது பக்கமும் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டிகளை பார்க் செய்ய வேண்டும்.
கோவிலுக்குப் பக்கத்தில் தீயணைப்புத் துறையினரின் வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் மட்டுமே நிறுத்த அனுமதி உண்டு. கோவிலுக்குப் பக்கத்தில் பேருந்துகளை கொண்டு வந்தால் திருப்ப இயலாது
5.கும்பாபிஷேகம் முடிந்து அடுத்த நாள் (7-4-22) முதல் 48 நாட்களுக்கு தினமும் காலையில் மண்டல பூஜை நடைபெறும்.கட்டளைதாரர்கள் 5,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பூஜை சாமான்கள் மற்றும் அன்னதானம் கோயிலில் இருந்து ஏற்பாடு செய்யப்படும்.
6. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்..
7 சமைப்பதற்கும், குடிப்பதற்கும் உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலை அணைக்கட்டின் தண்ணீர்தான் உபயோகப்படுத்தப்படும். இது "பேக்கேஜ்டு தண்ணீர்" அல்ல
8.சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் பாட்டிலில்கள், காபி, டீ,வடை, இளநீர், ஐஸ்கிரீம், போன்ற பதார்த்தங்கள், பூஜைக்கு வேண்டிய சாமான்கள் ஸ்டாலில் இருந்து விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9. தங்களது தலைக்கட்டு வரி மற்றும் நன்கொடைகளை இதுவரை வங்கி மூலம் கட்டாத அன்பர்கள் இங்கு ரசீது மூலம் பணம் கட்டலாம்.
11.500 ரூபாய்க்குக் கீழே உள்ள அன்னதானம் நன்கொடை, காணிக்கை போன்றவற்றை அதற்கான உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும். 500 ரூபாய்க்கு மேலே உள்ள நன்கொடைகளுக்கு மட்டுமே ரசீது எழுதப்படும்.🍁🍁🍁🍁
12. உங்களது முகவரியில் மாற்றம் இருந்தால் புதிய முகவரி (பெயர், வீட்டு எண், தெருப் பெயர், ஊர் பெயர், போஸ்ட் ஆபீஸ், பின்கோடு நம்பர், வாட்ஸ்அப் நம்பர் ஆகியவைகளுடன் ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி இங்கு வந்து இங்கே உள்ள பெட்டியில் போட வேண்டும்.
13. மொட்டை போடுவதற்கு மேல் கூரையுடன் புதிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொட்டை போடுவதற்கு ரூபாய் 100 செலுத்தி டோக்கன் வாங்கிக் கொள்ளலாம்.
🌻🌻🌻🌻🌻
கோவில் நிர்வாக குழு