Lic Agents' Organisation of India தமிழ்நாடு

  • Home
  • India
  • Chennai
  • Lic Agents' Organisation of India தமிழ்நாடு

Lic Agents' Organisation of India தமிழ்நாடு LICAOI is the registered trade union for LIC Agents

02/02/2026
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫*😔கண்ணீர் அஞ்சலி😔**LICAOI தஞ்சைக் கோட்டச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான அருமைத் தோழர். G. கோ...
12/06/2024

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
*😔கண்ணீர் அஞ்சலி😔*

*LICAOI தஞ்சைக் கோட்டச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான அருமைத் தோழர். G. கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (12/06/24) காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!*
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
*தன்னலமில்லாமல் அமைப்பிற்காக தன்னையே ஒப்புக் கொடுத்த நம் தோழனுக்கு தமிழ் மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலியினை உரித்தாக்குகிறது!*

*தோழருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாட்களுக்கு (13,14 &15) அமைப்பின் கொடியினை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மூன்று நாட்களில் அஞ்சலி நிகழ்வைத் தவிர அமைப்பின் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.*

கனத்த மனதுடன்,
S.A.கலாம்
தமிழ் மாநில பொதுச் செயலாளர்.

23/04/2023

தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர்
தோழர் பழகடை ...அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன்.

பழங்களோடு புத்தகங்களும் இவர் கடையில் வரிசைகட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உடலுக்கு நன்மை தர பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தர புத்தகங்கள்..

பழங்களைத்தான் இவர் விற்கிறாரே தவிர புத்தங்களை அல்ல. பழம் வாங்க வரும் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை இலவசமாகத் தருகிறார்.( சமூகம் வரலாறு அறிவியல் இலக்கியம் ஓவியம் உட்பட அனைத்து வகைப் புத்தகங்களும்)

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இது இங்கே தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் மூலம் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தோழர் பழக்கடை மிகப் பிரபலமாக அறிமுகமாகியிருக்கிறது.

இன்னும் இருக்கிறது ஆச்சரியம்.

60 வயதான இந்த குடும்பத்தலைவர் தஞ்சாவூர், பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர்..

இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவர் தன் மகளை கிறிஸ்துவருக்கும் இரண்டு மகன்களை இஸ்லாமியப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். .

இவர் மனைவி கவுரி; அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்.

தஞ்சையின் மையப் பகுதியில் இருக்கும் பூக்காரத் தெரு, ஒரு காலத்தில் சண்டை, சச்சரவுகளுக்குப் பேர் பெற்றது.

சாதி, மத சண்டைகளைத் தவிர்க்க நினைத்து, 1981-இல், 'சமாதானம் இளைஞர் நற்பணி மன்றம்' என்ற அமைப்பைத் துவங்கினார் ஹாஜாமைதீன்.

சாதி, மதம் பார்க்கக் கூடாது; ஆண்கள், குடித்து விட்டால் தெருவுக்குள் வரக் கூடாது; சண்டை, சச்சரவுகளை நியாயமான முறையில் பேசித் தீர்த்து கொள்ள வேண்டும்; ஏழை, எளிய மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்ய வேண்டும்'- இவைதான் இந்த மன்றத்தின் குறிக்கோள்கள், கொள்கை.

எனினும், மாற்றம் உடனே நடந்து விடவில்லை.

ஆண்டுதோறும் இங்கு ஐந்து நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுவோருக்கு, அரசியல் விழிப்புணர்வு புத்தகங்களைப் பரிசாக வழங்கி இருக்கிறார் மன்றத்தின் மூலம் ஹாஜாமைதீன்.

அப்படி இவர் நடத்திய போட்டி மூலமாகத் தான், இவர் மனைவி கவுரி இவருக்கு அறிமுகமானார். கௌரி அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி.முதலில் ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பாகி, காதலாகவும் ஆனது. ஆனால் மதம், பெரிய தடையாக இருந்தது. கவுரி, பிளஸ் 2 முடிக்கிற வரைக்கும் காத்திருந்த ஹாஜாமைதீன் பிறகு அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஹாஜாமைதீன் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. பார்த்தார். வேறு வழி தெரியவில்லை. கௌரியை அழைத்துக்கொண்டு நாகூர் சென்று பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார்.

அலைபாயுதே திரைப்படம் போல அதை வெளியே சொல்லாமல், அவரவர் வீட்டுக்கு அவரவர் சென்று, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவீட்டாருக்கும் விவரம் தெரிய வர, பெரிய பிரச்னை ஆகிப் போயிற்று. வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்து, தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர் இருவரும். 3 பையன்கள், ஒரு பெண்; ஒரு பையன், விபத்தில் இறந்து போய் விட்டார்..

இவர் கடை பில் புத்தகத்தில், 'என் கடையில் வாங்கிய பழங்கள் வீணாகி விட்டால் அதை மாற்றித் தருவேன்' என்ற வாசகத்தை அச்சடித்துள்ளார். அதன்படி பழங்களை வாங்கிக்கொண்டு போனவர்கள், வீணாகிவிட்டது என்று எடுத்து வந்தால், உடனே வேறு பழங்களை மாற்றித் தந்துவிடுகிறார்.

இதனால் மிகக் தொலைவிலிருந்தும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இவரது தோழர் பழக்கடையைத் தேடி வருகிறார்கள்.....

Source Facebook

நீங்கள் LIC யில் மன்ற முகவரா?உங்கள் மெடிகிளைம் கார்டை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளுங்கள்..(கீழே செயல் முறை விளக்க வீடிய...
26/01/2022

நீங்கள் LIC யில் மன்ற முகவரா?
உங்கள் மெடிகிளைம் கார்டை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளுங்கள்..(கீழே செயல் முறை விளக்க வீடியோ தமிழில் உள்ளது)
படியளிடப்பட்ட மருத்துவமனைகளில் பணம் இல்லா சிகிச்சை பெற இது பயன்படும்.
*Group Mediclaim Insurance Scheme for Club Member Agents* MY 2021-2022 Entry Age up to 85.
Policy period from 01/09/2021 to the31/08/2022
The New India Assurance Co Ltd.
Policy number 12030034210400000019
Club = Cover with Spouse
Corporate Club = 7 lakh
Club Galaxy = 6 lakh
Chairman's club = 5 lakh
Zonal Manager's Club = 3.5 lakh
DM's Club = 2.5 lakh
BM's Club = 2 lakh

LIC மன்ற முகவர்கள் மெடிகிளைம் CASLESS TREATMET பெற ID கார்டு அவசியம். இதை டவுன்லோட் செய்வது எப்படி? ஒரு செயல் விளக்கம் தமிழில்

லிக்காய் தஞ்சை கோட்டம் சார்பில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு முகவர்கள் மூலம் வழங்க பட இருக்கும் டைரி 2022 ஐ தஞ்சை கிழ...
22/09/2021

லிக்காய் தஞ்சை கோட்டம் சார்பில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு முகவர்கள் மூலம் வழங்க பட இருக்கும் டைரி 2022 ஐ தஞ்சை கிழக்கு கோட்டத்தின் கூட்டத்தில் இடையில் மன்னார்குடி யில் வெளியிட்ட நிகழ்வு..

எல் ஐ சி என்பது எப்போதும் சரியான முதலீட்டு முடிவு...
15/06/2021

எல் ஐ சி என்பது எப்போதும் சரியான முதலீட்டு முடிவு...

லிக்காய் உறுப்பினர் பதிவு கணக்கு முடிக்க திருச்சியில் கூடிய அவசர மாநிலக்குழு கூட்டம்...நிகழ்வுகள்
13/03/2021

லிக்காய் உறுப்பினர் பதிவு கணக்கு முடிக்க திருச்சியில் கூடிய அவசர மாநிலக்குழு கூட்டம்...நிகழ்வுகள்

Address

Chennai
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lic Agents' Organisation of India தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share